Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'அப்பா' ஆனார் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரவீந்திர ஜடேஜோ தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று உள்ளன.

Team India cricketer Ravindra Jadeja became a father to a baby girl

இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ரிவா சோனங்கியை திருமணம் செய்து கொண்டார்.

ஓராண்டை நிறைவு செய்த இவர்களுக்கு தற்போது அழகான குட்டி தேவதை பிறந்துள்ளது. பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

அப்போட்டியில் 8 ஓவர்கள் பந்துவீசிய ஜடேஜா 43 ரன்களை கொடுத்து அசார் அலி, முகமது ஹஃபீஸ் ஆகிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் ஓவல் மைதானத்தில் இந்தியா - இலங்கை இடையே அறையிறுதிக்கான வழியை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியிலும் கூடுதல் மகிழ்ச்சியுடன் ஜடேஜா தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, June 8, 2017, 14:27 [IST]
Other articles published on Jun 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+