Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குடும்பம் குடும்பமாக.. ஃபேமிலி டூரா?.. கிரிக்கெட் டூரா? - இங்கி., கிளம்பிய இந்திய அணி - வைரல் வீடியோ

மும்பை: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணி நேற்றிரவு மும்பையில் இருந்து கிளம்பியது. வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இரு கடுமையான தொடர்கள், அதுவும் இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால், இத்தொடர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.

கிளம்பிய இந்திய அணி

கிளம்பிய இந்திய அணி

பெண்கள் அணியும் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில், ஆண்கள் அணியினரும், பெண்கள் அணியினரும் நேற்று நள்ளிரவு (ஜூன்.2) மும்பையில் இருந்து இங்கிலாந்து கிளம்பினார்கள். நேற்று மாலை 5 மணிக்கு ஹாட்ஸ்டார் வாயிலாக கேப்டன் விராட் கோலியும், கோச் ரவி சாஸ்திரியும் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டனர். அதன் பிறகு இந்திய அணி இங்கிலாந்து கிளம்பிச் சென்றது.

மீண்டும் சோதனை

மீண்டும் சோதனை

Bio-safety நெறிமுறைகளின்படி, இங்கிலாந்து அரசு மற்றும் பொது சுகாதார இங்கிலாந்து தேவைகளுக்கு ஏற்ப, இந்திய அணி, சார்ட்டர் விமானத்தில் இங்கிலாந்து கிளம்பியது. கையோடு பி.சி.ஆர் சோதனை நெகட்டிவ் ரிசல்ட்டை வீரர்கள் கொண்டு சென்றனர். இங்கிலாந்து வருவதற்கு முன்னர், இந்திய அணி மும்பையில் 14 நாட்கள் பயோ-பபுளில் இருந்தது. அப்போது வழக்கமான சோதனைகள் எடுக்கப்பட்டிருக்கும். இங்கிலாந்திலும் அவர்கள் நேரடியாக ஹாம்ப்ஷயர் Bowl-ல் உள்ள ஹோட்டலுக்குச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மனைவி, குழந்தைகள்

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இங்கிலாந்தில் செலவழிக்கவுள்ள இந்திய வீரர்கள், தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் சென்றனர். அதன்படி, கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகா-வுடன் இங்கிலாந்து கிளம்பினார். அதேபோல், அனைத்து வீரர்களும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் இங்கிலாந்து கிளம்பினர்.

ஜாலி கமெண்ட்

ஜாலி கமெண்ட்

அதன்படி, வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கிலாந்து செல்ல மும்பை விமான நிலையம் வந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏதோ, ஆன்மீக பயணம் போன்று, குடும்பம் குடும்பமாக பேருந்தில் இருந்து வந்திறங்கினார்கள். ரோஹித், ரஹானே, அஷ்வின், என்று பல வீரர்களும் தங்கள் குழந்தைகளுடன் வந்திறங்கினர். இதில், நம்ம அஷ்வின் மூன்று குழந்தைகளை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். அவருக்கு மொத்தமே இரண்டு பிள்ளைகள் தானே என்றெல்லாம் வீரர்கள் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர். எப்படியோ, குடும்பமாக சுற்றுலா போல வந்தாலும், தொடரில் கவனம் சிதறாமல் விளையாடினால் சரி.

Story first published: Thursday, June 3, 2021, 17:05 [IST]
Other articles published on Jun 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+