Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா, சுந்தர் நீக்கம்.. அணிக்குள் வந்த அக்சர், குல்தீப்.. கோலி சொன்ன அந்த வார்த்தை.. ஷாக் பின்னணி

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் மூன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. ரசிகர்களுக்கு முன்னிலையில் இந்த டெஸ்ட் நடக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் மூன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பவுலிங்கில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. கோலி இதற்கு பின் நிறைய திட்டங்கள் இருக்கும் என்கிறார்கள்.

இந்திய அணி

இந்திய அணி

இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து பும்ரா, வாஷிங்க்டன் சுந்தர், சுபாஷ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். இதில் நதீம் கடந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. இவரின் நீக்கம் எதிர்பார்த்ததுதான். இதனால் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

யாரும் வர மாட்டார்கள்

யாரும் வர மாட்டார்கள்

இன்னொரு பக்கம் யாரும் எதிர்பார்க்காமல் பும்ரா நீக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு பதிலாக சிராஜ் அணிக்குள் வந்துள்ளார். இன்னொரு பக்கம் நதீமிற்கு பதிலாக குல்தீப் வந்துள்ளார். அதேபோல் சுந்தருக்கு பதிலாக சிராஜ் அணிக்குள் வந்துள்ளார்.

கோலி பேட்டிங்

கோலி பேட்டிங்

இது தொடர்பாக கோலி அளித்த பேட்டியில், கடந்த போட்டியில் நான் தேர்வு செய்த அணிக்கு காரணம் இருக்கிறது. இந்த போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் தோல்வி அடைவது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்தான் .

மீண்டும் வர வேண்டும்

மீண்டும் வர வேண்டும்

இதனால் அதில் இருந்து மீண்டு வர வேண்டும். இன்று நன்றாக ஆடுவோம். பும்ராவிற்கு பதிலாக அணிக்குள் சிராஜ் அணிக்குள் வருகிறார் என்று கோலி குறிப்பிட்டுள்ளார். சென்னை பிட்சில் இரண்டாவது நாளில் இருந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்.

பவுலர்கள்

பவுலர்கள்

இதனால் அதற்கு ஏற்றபடி பவுலர்களை தேர்வு செய்ய வேண்டும். இதனால் இஷாந்த் சர்மா மற்றும் சிராஜ் வந்துள்ளனர். சிராஜ் அணிக்குள் வந்ததே ரிவர்ஸ் ஸ்விங்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

Story first published: Saturday, February 13, 2021, 9:57 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+