3 மீ விதிமுறை முதல்.. கோலியின் கிளாஸ் ஆட்டம் வரை.. 3வது நாள் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் பல்வேறு திருப்புமுணைகளுடனும், ஆச்சரியங்களுடனும் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும் போட்டிக்கு முடிவு கிடைக்குமா என்ற குழப்பம் மட்டும் ரசிகர்களிடம் நீண்டு வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மோதிரா மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 280 ரன்களை குவித்து அசத்தியது
உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் சதத்தின் மூலம் இந்த இமாலய ஸ்கோர் வந்தது. முதல் இன்னிங்ஸை முடிப்பதற்காக அந்த அணி கிட்டத்தட்ட 2 நாட்களை எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2வது நாளில் வெறும் 10 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டது.

3வது நாள் ஆட்டம்
வலுவான நிலையுடன் 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் ஓப்பனர்கள் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஆகியோர் 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சற்று அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் துரதிஷ்டவசமாக 35 ரன்களை அடித்து வெளியேறினார். எனினும் இதன் பின்னர் வந்த சட்டீஸ்வர் புஜாரா மற்றும் கில் ஆகியோர் மீண்டும் ஒரு அட்டகாச பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். வழக்கம் போல பவுலர்களின் பொறுமையை சோதித்த புஜாரா 121 பந்துகளில் 42 ரன்களை அடித்து வெளியேறினார்.

சுப்மன் கில் சதம்
மறுமுணையில் தூண் போல நிலைத்து நின்று விளையாடிய சுப்மன் கில் தனது 2வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 235 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 128 ரன்களை குவித்து அவுட்டார். சுப்மன் கில் 40 ரன்களுக்குள்ளாகவே அவுட்டாகியிருக்க வேண்டும். ஆனால் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தால் தப்பித்தார். அதாவது நாதன் லியோன் வீசிய பந்தில் எல்.பி.டபள்யூ அவுட்டானார். ஆனால் பந்து பேடில் பட்ட இடத்தில் இருந்து ஸ்டம்ப்-ஐ தொடுவதற்கு 3 மீட்டருக்குள் தூரம் இருக்க வேண்டும். ஆனால் அதிகமாக இருந்ததால் நாட் அவுட் தரப்பட்டது.

3 மீட்டர் விதி
இந்த 3 மீட்டர் விதிமுறை காரணமாக குறைவான ரன்களில் ஆட்டமிழந்திருக்க வேண்டிய சுப்மன் கில் 128 ரன்கள் வரை குவித்துவிட்டார். இதனைத்தொடர்ந்து வந்த விராட் கோலி, பேட்டிங்கிற்கு ஏற்ற களத்தில் தனக்கே உரிய பாணியில் மாஸ் காட்டினார். ரவீந்திர ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வரும் கோலி 128 பந்துகளில் 59 ரன்களை குவித்து விளையாடி வருகிறார். அவருக்கு உறுதுணையாக உள்ள ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

3வது நாள் முடிவு
இதன் மூலம் 3வது நாளின் முடிவில் இந்திய அணி 289 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து வலுவான நிலையில் உள்ளது. நாளை தினத்தின் மதியத்திற்குள் இந்திய அணி 500 ரன்கள் வரை அடித்துவிட்டால் மட்டுமே ஆஸ்திரேலியாவை 2வது இன்னிங்ஸில் சுருட்ட கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கும். இல்லையென்றால் போட்டியில் சமனில் முடிவடைய தான் அதிக வாய்ப்புகள் உண்டு.


Click it and Unblock the Notifications