Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பிரமாண்ட சாதனை.. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு காத்துள்ள வாய்ப்பு..சாதிப்பாரா ஷிகர் தவான்

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 வரலாற்று சாதனையை படைக்கவுள்ளது.

Recommended Video

IND vs WI Ravindra Jadeja இந்திய அணியில் இல்லை *Cricket

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு குயின்ஸ் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் காணலாம். ஆன்லைனில் fancode செயலியில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..

முதல் போட்டி

முதல் போட்டி

ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால் ஷிகர் தவான் தலைமையில் இளம் படை தான் களமிறங்குகிறது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து தொடர்களில் வெற்றியை பதிவு செய்துள்ள இந்த இளம்படை இதிலும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 சாதனைகள்

2 சாதனைகள்

இந்நிலையில் இன்றைய போட்டியில் 2 வரலாற்று சாதனை படைக்கப்படவுள்ளது. அதாவது கடந்த 16 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் கூட இந்திய அணி தோற்கவில்லை. 2006 முதல் தற்போது வரை தொடர்ச்சியாக 11 தொடர்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் முதலிடத்தில் உள்ளன. பாகிஸ்தான் அணியும் ஜிம்பாவேவுடன் 11 வெற்றிகளை பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த வெற்றிகள்

ஒட்டுமொத்த வெற்றிகள்

எனவே இன்று தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றிவிட்டால், பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிட்டு, முதலிடத்தை தனியாக கைப்பற்றிவிடும். ஒட்டுமொத்தமாக இதுவரை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 67 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

2வது பெருமை

2வது பெருமை

இந்த தொடரைக் கைப்பற்றவில்லை என்றாலும், இன்றைய முதல் போட்டியில் வெற்றி பெற்றால் கூட வரலாற்று சாதனை தான். அதாவது அயல்நாட்டில் உள்ள ஒரு மைதானத்தில் அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ள அணியாக இந்தியா சாதனை படைக்கும். தற்போது வரை குயின்ஸ் பார்க் மைதானத்தில் இந்திய அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றுள்ளது. வெற்றி விகிதம் 3.25 ஆகும்.

Story first published: Friday, July 22, 2022, 16:30 [IST]
Other articles published on Jul 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+