Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிட்னி டெஸ்ட்.. ஆரம்பத்திலேயே ஆஸி.யை ஆட்டிப்படைத்த இந்தியா.. 4 மணி நேரமாக ஆட்டம் காட்டும் மழை!

சிட்னி: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்டில் தற்போது மழை காரணமாக தடைபட்டு உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு பதிலடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றியை ருசித்தது.

இன்றுக்கு

இன்றுக்கு

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெறும் வகையில் இந்தியா இன்று களமிறங்குகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆட போகும் இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது. இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக உமேஷ் யாதவ் நீக்கப்பட்டார்.

ரோஹித்

ரோஹித்

இந்திய அணியில் தற்போது ரோஹித் சர்மா இணைந்துள்ளார். இந்திய அணியில் ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவிற்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆடும் அணி

ஆடும் அணி

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா, ஜடேஜா, பண்ட், விஹாரி, பும்ரா, சிராஜ், அஸ்வின், சைனி ஆகியோர் ஆடுகிறார்கள். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்கம்

தொடக்கம்

ஆஸ்திரேலிய பேட்டிங் இறங்கி தொடக்கத்திலேயே திணற தொடங்கியது. அதிகம் எதிர்பார்த்த வார்னர் வெறும் 5 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பவுலிங்கில் அவுட் ஆனார். அதன்பின் வில் புக்கோவஸ்கி, மார்னஸ் இறங்கி ஆடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டது. கடந்த 4 மணி நேரமாக சிட்னியில் மழை பெய்து வரும் நிலையில் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Story first published: Thursday, January 7, 2021, 8:49 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+