Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவின் அநாகரீக செயல்.. இந்திய அணி குறித்து கிண்டல் பதிவு.. தரமான பதிலடி தரும் ரசிகர்கள்!

நாக்பூர்: பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விரைவில் தொடங்கவுள்ள சூழலில் இந்திய அணியை சீண்டிப் பார்க்கும் வகையில் ஆஸ்திரேலியா போட்டுள்ள ட்வீட்டால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணி பயிற்சி போட்டியை தவிர்த்துவிட்டு, ஸ்பின்னர்களுக்கு சாதகமான களத்தை பெங்களூருவில் உருவாக்கி பயிற்சி செய்து வருகின்றனர்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

பார்டர் கவாஸ்கர் கோப்பை என்றாலே பல்வேறு பரபரப்பு சம்பவங்களை எதிர்பார்க்கலாம். அதற்கேற்றார் போலவே ஆஸ்திரேலியா 10 நாட்களுக்கு முன்பு இருந்தே தொடங்கியது. அதாவது இந்தியாவில் பிட்ச்-ல் பல்வேறு குளறுபடி நடப்பதாகவும், இந்தியா நியாயமாக நடந்துக்கொண்டால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் பயிற்சியின் போது வேறு பிட்ச்-ம், நிஜ போட்டியின் போது வேறு பிட்ச்-ம் கொடுப்பது நியாயம் இல்லை எனக்கூறினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி தந்தனர்.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இந்நிலையில் இந்தியாவை சீண்ட தற்போது ஒருபடி மேல் சென்றுள்ளனர். அதாவது கடந்தாண்டு அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய வீடியோவை பதிவிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கிண்டல் செய்துள்ளது. கோலி தலைமை தாங்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இந்தியாவின் மிக மோசமான தோல்வி அதுவாகும்.

கொந்தளித்த ரசிகர்கள்

கொந்தளித்த ரசிகர்கள்

இதனை பார்த்த இந்திய ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கொந்தளித்துள்ளனர். முதலில் வெற்றி கண்டது யார் என்பது முக்கியமல்ல, தொடரின் இறுதியில் என்ன நடந்தது என்பது தான் முக்கியம் என ஆஸ்திரேலியாவை விளாசி வருகின்றனர். ஆம், முதல் போட்டியில் தோவ்வியடைந்த போதும், அடுத்த போட்டிகளில் ரகானே தலைமையில் மிகச்சிறப்பாக செயல்பட்டது. ஆஸ்திரேலியாவை 2 - 1 என வீழ்த்தி அசத்தியிருந்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கோட்டையான காப்பாவை தகர்து எறிந்தனர்.

அட்டகாச ரெக்கார்ட்

அட்டகாச ரெக்கார்ட்

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கடைசி 3 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதில் 2 முறை ஆஸ்திரேலியா மண்ணில் வென்றதாகும். இந்த முறையும் வெற்றி பெற வாய்ப்பு மிக குறைவாகும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட ஆஸ்திரேலியா கைப்பற்றியதே கிடையாது. இந்த முறையும் கைப்பற்றுமா என்பது சந்தேகமே ஆகும்.

Story first published: Monday, February 6, 2023, 19:38 [IST]
Other articles published on Feb 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+