அட போங்கய்யா.. மிஸ்ஸான நடராஜனின் விக்கெட்.. அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் இந்திய வீரர்கள்!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கேட்ச் மிஸ் செய்ய துவங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் தற்போது பிரிஸ்போனில் நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடி வருகிறது.

நிதானம்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கேட்ச் மிஸ் செய்ய துவங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடர் முழுக்க இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கேட்ச்களை மிஸ் செய்து வருகிறார்கள். முதல் மூன்று டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணி வீரர்கள் அதிக கேட்ச்களை விட்டனர்.

கேட்ச்
முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய வீரர்கள் 10 கேட்ச்களை விட்டனர். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையவே இந்திய வீரர்கள் கேட்ச் விட்டதுதான் முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் இன்றும் இந்திய வீரர்கள் கேட்ச் விட்டனர்.

மோசம்
சைனி ஓவரில் ரஹானே இன்று கேட்ச் விட்டார். சைனி பந்தில் மார்னஸ் பேட்டில் எட்ஜாகி வந்த பந்தை ரஹானே தவறவிட்டார். இது முதல் கேட்ச் மிஸ்ஸாகும். அதன்பின் மார்ன்ஸ் அதிரடியாக ஆட தொடங்கினார்.

மீண்டும்
இந்த நிலையில் மீண்டும் மார்னஸ் பேட்டில் எட்ஜாகி வந்த பந்தை பண்ட் - புஜாரா தவறவிட்டனர். நடராஜன் இந்த பந்தில் விக்கெட் எடுத்திருக்க வேண்டியது. ஆனால் இதை தவறவிட்டனர். இந்த தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கேட்ச் மிஸ் செய்வது பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது .


Click it and Unblock the Notifications