தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி.. ஐபிஎலில் கலக்கியவர்களுக்கு வாய்ப்பு.. உத்தேச அணி பட்டியல்
மும்பை: ஐபிஎல் தொடரில் கலக்கிய விரர்களுக்கு தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்ததும் அடுத்த 10 நாட்களில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5டி20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தொடருக்கான உத்தேச அணியை பார்க்கலாம்.

முன்வரிசை வீரர்கள்
தொடக்க வீரர் மற்றும் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. கேஎல் ராகுல் நல்ல பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பு அவர் காயத்தில் இருந்ததால், இந்த தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்படாது. அவருக்கு ஜோடியாக இஷான் கிஷன் அல்லது ஷிகர் தவான் களமிறங்கலாம். மூன்றாவது வீரராக கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் நிலையில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படலாம்.

நடுவரிசை வீரர்கள்
இந்திய அணியின் 4வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார். அவர் நல்ல பார்மில் இருப்பது கூடுதல் பலம். 5வது வீரராக நடு வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெறலாம். ரிஷப் பண்ட்க்கு ஓய்வு அளிக்கப்பட்டால் 6வது வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் தினேஷ் கார்த்திக் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. 7வது வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளது.

பந்துவீச்சாளர்கள்
ஐபிஎல் தொடரில் சொதப்பினாலும் 8வது வீரராக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்திய அணியில் இடம்பெறுவார். 9வது வீரராக சுழற்பந்துவீச்சாளர் சாஹல் களமிறங்குவார். இதே போன்று வேகப்பந்துவீச்சு பிரிவில் 10வது வீரராக புவனேஸ்வர் குமாரும், 11வது வீரராக உம்ரான் மாலிக்கும் இடம்பெறலாம். பும்ராவும் இந்த தொடரில் ஓய்வு வழங்கப்படும்.

கூடுதல் வீரர்கள்
இதே போன்று சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்,உமேஷ் யாதவ், ஹர்சல் பட்டேல், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, ஆகியோர் கூடுதல் வீரராக இந்திய அணியில் சேர்க்கப்படலாம். இதில் ரோகித், கோலி, பும்ரா ஆகியோர் இந்திய அணிக்கு திரும்புவார்கள். இந்த 19 பேரை கொண்டே டி20 உலககோப்பையில் இந்திய அணி களமிறங்கும்.


Click it and Unblock the Notifications