இந்திய டீமின் கம்பேக்கை எதிர்பார்க்கவில்லை.. ஆடிபோய்விட்டேன்.. டிரிபிள் எச் என்ன இப்படி சொல்கிறார்!
டெல்லி: இந்திய அணியின் கம்பேக் மிகப்பெரிய ஆச்சரியம் அளிக்கிறது, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று WWE வீரர் டிரிபிள் எச் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகை சீட் நுனியில் உட்கார வைத்த இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவிற்கு வந்துள்ளது. பல திருப்பங்கள், சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பை குறித்து WWE வீரர் டிரிபிள் எச் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியை டிரிபிள் எச் பாராட்டி உள்ளார்.

டிரிபிள் எச்
டிரிபிள் எச் தனது பேட்டியில், இந்தியா ஆஸ்திரேலியா தொடரை நானும் பார்த்தேன். நேர வேறுபாடு காரணமாக லைவில் பார்க்க முடியவில்லை. ஆனாலும் மொத்த தொடரையும் கண்டுகளித்தேன். இந்த தொடர் எனக்கு மிகப்பெரிய வியப்பை கொடுத்தது . இந்தியாவின் ஆட்டம் எனக்கு மலைப்பை கொடுத்தது.

இந்திய அணி
WWE போட்டிகளில் நடப்பது போல இந்திய அணி பெரிய அளவில் திருப்பம் கொடுத்தது. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்தியா கொடுத்த கம்பேக் திரைப்பட கதை போல இருந்தது. இந்திய அணியை தனிப்பட்ட வகையில் அழைத்து பாராட்ட வேண்டும்.

வெற்றி
இந்தியர்கள் கண்டிப்பாக இந்த வெற்றியை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். இந்திய அணியுடன் சேர்ந்து இந்த வெற்றியை கொண்டாட விரும்புகிறேன். இந்திய அணி வீரர்கள் யாராவது எங்களை தொடர்பு கொண்டு இது குறித்து பேசலாம்.

உயரம்
இந்திய அணி இன்னும் பல உயரங்களை தொட வேண்டும். இன்னும் இதேபோன்ற வெற்றிகளை இந்திய அணி குவிக்க வேண்டும். இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று WWE வீரர் டிரிபிள் எச் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications