Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4வது டெஸ்ட்... தீவிரமா பயிற்சி எடுக்கும் இந்திய அணி... டிரா அல்லது வென்றாக வேண்டிய கட்டாயம்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்த போட்டியை டிரா அல்லது வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் புகைப்படங்களை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2ல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி அல்லது டிரா கட்டாயம்

வெற்றி அல்லது டிரா கட்டாயம்

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணி அடுத்த போட்டியில் டிரா அல்லது வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த போட்டியில் வெற்றி பெறும் வகையில் இந்திய அணி தீவிர வலை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் புகைப்படங்களை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பு

ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில் அடுத்த போட்டியை இந்திய அணி டிரா அல்லது வெற்றி பெறாமல் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்ததாக உள்ள ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

புள்ளிகள் குறைக்க வாய்ப்பு

புள்ளிகள் குறைக்க வாய்ப்பு

ஏற்கனவே கடந்த போட்டியின் பிட்ச் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது நிரூபிக்கப்பட்டால் இந்திய அணியின் புள்ளிகளை குறைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அவ்வாறு குறைக்கப்பட்டாலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.

Story first published: Monday, March 1, 2021, 10:09 [IST]
Other articles published on Mar 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+