Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரும்பு கோட்டையாக நின்ற புஜாரா.. ஆஸ்திரேலியாவுக்கு குறைந்த இலக்கை தந்த இந்தியா..வெற்றி பெற முடியுமா?

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட அழுத்ததால் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இந்திய அணி சிக்கியுள்ளது. வெற்றி கிடைக்குமா என ரசிகர்கள் கவலையுடன் காத்துள்ளனர்.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் படு மோசமாக ஸ்பின் ஆனது. இதனால் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர்.

தடுமாறிய இந்திய அணி

தடுமாறிய இந்திய அணி

மிக குறைந்த ஸ்கோரை எதிர்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி களத்தை புரிந்துக்கொண்டு சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். முதல் நாள் ஆட்டத்தை 156 /4 என முடித்தது. இதனையடுத்து இன்று 2வது நாளை தொடங்கிய அந்த அணி 186 /4 வரை சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவிடம் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது. இதனால் 197 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது.

2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

88 ரன்கள் பின் தங்கிய சூழலில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய வீரர்கள் இந்த முறையும் பெரிதாக சோபிக்கவில்லை. ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்களுக்கும், சுப்மன் கில் 5 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த விராட் கோலி 13, ஜடேஜா 7, ஸ்ரேயாஸ் ஐயர் 26, கே.எஸ்.பரத் 3 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி சரிவில் சிக்கியது.

புஜாராவின் இன்னிங்ஸ்

புஜாராவின் இன்னிங்ஸ்

தனி ஆளாக நின்று போராடிய சட்டீஸ்வர் புஜாரா மட்டும் 142 பந்துகளில் 59 ரன்களை அடித்து இந்திய அணியை மீட்டார். அவருடன் உறுதுணையாக நின்று விளையாடிய அக்‌ஷர் பட்டேல் 15 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். எனினும் அவருக்கு மற்ற வீரர்கள் உதவவில்லை. இதனால் 2வது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம் 75 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெற்றி கிடைக்குமா?

வெற்றி கிடைக்குமா?

இந்தூர் பிட்ச் தற்போது உள்ள சூழலுக்கு 130 ரன்கள் அடித்திருந்தால் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்கும். 75 ரன்கள் என்பது சவால் கொடுக்கக்கூடிய இலக்கு மட்டுமே ஆகும். எனவே இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணி தங்களது மேஜிக்கை காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

Story first published: Thursday, March 2, 2023, 17:25 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+