Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ இதென்னா புதுசா.. இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் வந்த தலைவலி.. அரையிறுதியில் நிம்மதியே இருக்காது!!

அடிலெய்ட்: இங்கிலாந்து அணியுடனான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு புதிய பிரச்சினை ஒன்று கிளம்பியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப்போட்டியான இது அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிகு இந்த போட்டி தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுவிட்டதால், இன்று இந்திய அணி வென்றால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

இந்த போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11 இரு அணிகளுக்குமே பிரச்சினை நிலவுகிறது. குறிப்பாக இங்கிலாந்து அணியில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் குழப்பம் நீடித்து வருகிறது. தொடக்க வீரர் டேவிட் மாலனின் ஃபிட்னஸ் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதே போல முதன்மை பவுலர் மார்க் வுட்டிற்கும் தசைப்பிடிப்பு பிரச்சினை உள்ளதால் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் ரிஸ்க்

பெரும் ரிஸ்க்

இந்நிலையில் இது ஒருவகையில் இந்திய அணிக்கு சாதகம் என நினைத்தாலும், மற்றொருபுறம் பெரிய ரிஸ்க் ஆகும். ஏனென்றால் மார்க் வுட்டிற்கு மாற்று வீரராக கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டிருக்கிறார். அடிலெய்ட் மைதானத்தில் அதிக அனுபவம் கொண்டவர் கிறிஸ் ஜோர்டன். அந்த மைதானத்தின் பிட்ச் பெரிதாக மாற்றப்படாததால் இன்று அச்சுறுத்தலாக இருப்பார். இந்தியாவுக்கு எதிராகவும் நல்ல ரெக்கார்ட் ஜோர்டனுக்கு உள்ளது.

கடைசி நேர அதிரடி

கடைசி நேர அதிரடி

இதே போல அவரால் மற்றொரு பெரிய பிரச்சினை இருக்கிறது. இங்கிலாந்தின் முதல் 5 - 6 விக்கெட்களை விரைவாக வீழ்த்திவிட்டாலும், கடைசி நேரத்தில் எத்தனை ரன்களை வேண்டுமானாலும் அதிரடியாக எடுத்துக்கொடுக்கக்கூடியவர் ஜோர்டன். ஒருவேளை கடைசி ஓவர் வரை போட்டி சென்றால் ஜோர்டன் மிகப்பெரிய தலைவலியாக இந்தியாவுக்கு வந்து நிற்பார். ஏனென்றால் அந்த அணியில் 8வது விக்கெட் வரை நல்ல பேட்டிங் ஆழம் இருக்கிறது.

முதல் பேட்டிங் சிக்கல்

முதல் பேட்டிங் சிக்கல்

அடிலெய்ட் பிட்ச்-ஐ பொறுத்தவரையில் நேரம் போக போக மெதுவாகும். எனவே இங்கு டாஸில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்வதே சிறந்ததாக இருக்கும். அப்படி இந்திய அணி பேட்டிங் செய்தால் இங்கிலாந்து போன்ற பேட்டிங் வரிசையை சமாளிக்க குறைந்தது 180+ ரன்கள் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 10, 2022, 10:45 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+