Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ மை காட்.. இந்தியாவுக்கு எமனாக வந்த ஹேமில்டன்.. 2வது போட்டியில் ஜெயிப்பது கஷ்டம் தான்.. காரணம் என்ன

ஹேமில்டன்: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் இருப்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது.

முதலில் பேட்டிங் செய்து 306 ரன்களை குவித்த போதும், இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனையடுத்து இந்தியாவின் வாழ்வா? சாவா? கட்டமான 2வது போட்டி நாளை நடைபெறுகிறது.

போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

இரு அணிகளும் மோதும் இந்த 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் உள்ள செடோன் பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் ஹாமில்டன் மைதானம் இந்தியாவுக்கு எமனாக வந்து நின்றுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

நியூசிலாந்திலேயே இந்தியாவுக்கு மிகவும் மோசமான மைதானம் என்றால் அது ஹாமில்டன் தான். இங்கு இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றிகண்டுள்ளது. மற்ற அனைத்திலும் தோல்வி தான். அந்த ஒரே ஒரு வெற்றி கடந்த 2009ம் ஆண்டு தோனி கேப்டனாக இருந்த போது வந்தது. 1981ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இந்தியாவால் இங்கு சோபிக்கவே முடியவில்லை.

மிக மோசம்

மிக மோசம்

கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு இங்கு நடந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 347 ரன்களை குவித்தது. இந்த இமாலய இலக்கை கூட கட்டுப்படுத்த முடியாமல் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றிருந்தது. தற்போது நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில் 306 ரன்களே அடித்தும் தோற்ற இந்தியா, ஹேமில்டனில் 350 அடித்தாலும் போதாது.

பவுலிங் பிரச்சினை

பவுலிங் பிரச்சினை

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் மிகச்சிறப்பானதாக இருக்கிறது. ஆனால் நியூசிலாந்தில் உள்ள சிறிய மைதானங்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் பவுலிங் மிக சிறப்பாக இருந்தால் மட்டுமே முடியும். அதற்கு அனுபவம் வாய்ந்த தீபக் சஹார் உள்ளிட்ட வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும்.

Story first published: Saturday, November 26, 2022, 17:08 [IST]
Other articles published on Nov 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+