இன்று இந்திய அணிக்கு உள்ள சவால்.. பாக். சாதனையை சமன் செய்ய வாய்ப்பு.. 2வது டி20 போட்டியின் சுவாரஸ்யம்
செயிண்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணியின் முக்கிய சாதனையை இந்தியா சமன் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முன்னிலையில் உள்ள சூழலில் 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.

2வது டி20
செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தானின் முக்கிய சாதனையை சமன் செய்யும். அதாவது சர்வதேச டி20ல் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற சாதனையை படைக்கும்.

புதிய சாதனை
இந்திய அணி இதுவரை வெஸ்ட் இண்டீஸுடன் 21 டி20 போட்டிகளில் விளையாடி 14 வெற்றிகளை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 21 போட்டிகளில் 15 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே இன்னும் ஒரே ஒரு வெற்றி பெற்றால் பாகிஸ்தானின் சாதனையுடன் இந்தியா சமன் செய்யும். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற பட்டியலில் இந்த சாதனை 3வது இடத்தை பிடிக்கும்.

சாதனை பட்டியல்
பட்டியலில் முதலிடத்தையும் இந்தியா தான் வைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிராக 17 வெற்றிகளை இதுவரை பெற்றுள்ளது. 2வது இடத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாவேவுக்கு எதிராக 16 வெற்றிகளை பெற்றுள்ளது. 3வது இடத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இடம்பெறும்.

வெற்றி பெறுவது கடினம்
ஆனால் இன்று இந்திய அணி வெற்றி பெறுவது கடினமான ஒன்று தான். ஏனென்றால் போட்டி நடைபெறும் வார்னர் பார்க் மைதானத்தில் முதல்முறையாக இந்தியா விளையாடுகிறது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியோ இங்கு இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளது. அதுவும் கடைசியாக 2019ம் ஆண்டுக்கு பிறகு தோல்வியே கண்டதில்லை.


Click it and Unblock the Notifications