For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி ஒரு முடிவோடத்தான் இருக்காங்க... சிட்னியில வெற்றிக்கு அதிக சான்ஸ் இருக்கு... கெய்ல் உறுதி

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை சிட்னியில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்று 2க்கு 1 என்ற விகிதத்தில் வெற்றி பெறும் தீவிரத்தில் இந்தியா உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெறும் உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளதாக மேற்கிந்திய தீவுகளின் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட்

3வது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இதையடுத்து வரும் 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது.

சிறப்பான உத்வேகம்

சிறப்பான உத்வேகம்

இந்தப் போட்டிக்காக சிட்னிக்கு இன்றைய தினம் இரு அணிகளும் தங்களது பயணத்தை மேற்கொண்டன. இதையடுத்து அங்கு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மெல்போர்ன் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் ரஹானே தலைமையிலான இந்திய அணி சிறப்பான உத்வேகத்தில் உள்ளதாக மேற்கிந்திய தீவுகளின் வீரர் கிறிஸ் கெய்ல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெற்றியை பெற்ற அணி

வெற்றியை பெற்ற அணி

விராட் கோலி, முகமது ஷமி மற்றும் ரோகித் சர்மா இல்லாமல் இளம் வீரர்கள் மற்றும் சில மூத்த வீரர்களே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கெய்ல், சிட்னியில் நடைபெறவுள்ள 3வது போட்டியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் தொடர்ந்து ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வலிமையான கூட்டணி

வலிமையான கூட்டணி

கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கெய்ல், இந்த தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணி எப்போதும் வலிமையான கூட்டணியை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

இந்திய கேப்டன் விராட் கோலியின் இடத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள கெய்ல், ஆயினும் அவர் இல்லாமல் கடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதுவே இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, January 4, 2021, 19:18 [IST]
Other articles published on Jan 4, 2021
English summary
Indian team built momentum now to play at Sydney -Chris Gayle
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+