
தடுமாறும் மிடில் ஆர்டர்
இந்திய அணியின் ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் இந்திய அணி முதல் விக்கெட்டிற்கு 117 ரன்களை குவித்தது. எனினும் மிடில் ஆர்டர் சற்று சருக்கியது. கேப்டன் விராட் கோலி (35), சட்டீஸ்வர் புஜாரா (0), மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோர் தான் இந்தியாவின் மிடில் ஆர்டர் தூணாக உள்ளனர். இவர்களில் தற்போது ரகானே மட்டும் தான் நின்று விளையாடியிருப்பதால் இந்திய அணி தப்பித்துள்ளது. மற்ற இருவரும் சொதப்பினர்.

டிராவிட்டின் பதில்
இந்நிலையில் இந்திய அணி 2 வீரர்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என ராகுல் டிராவிட் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இதுபோன்ற டெஸ்ட் தொடர்களை வெல்ல குழுவாக முயன்றால் மட்டுமே முடியும். தனி வீரரால் முடியாது. ஒவ்வொரு வீரரும் அவர்களின் செயலை கட்சிதமாக முடித்துக் கொடுத்தாக வேண்டும். விராட் கோலி, புஜாரா மட்டும் செய்யவில்லை எனக்கூறி எப்போதும் குறைக்கூற முடியாது.

முடியாத காரியம்
இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். டாப் 7 அல்லது 8 வீரர்கள் பேட்டிங்கில் சோபித்தே ஆக வேண்டும். இந்திய அணியின் லோயர் ஆர்டர் பேட்டிங் கூட ஆட்டத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வரலாம். ஒரே ஒரு வீரர் மட்டும் அனைத்து தொடர்களிலும் ரன் குவிக்க வேண்டும் என்றால் முடியாத காரியம் அது எனக்கூறியுள்ளார்.
Recommended Video

ரகானேவின் பொறுப்பான ஆட்டம்
முதல் டெஸ்டில் சட்டீஸ்வர் புஜாரா கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினாலும், ரகானே பொறுப்புடன் நின்று விளையாடி வருகிறார். 81 பந்துகளை சந்தித்துள்ள அவர் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்ததோடு, கே.எல்.ராகுலுடன் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











