Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி பெற்ற கையுடன் அவசர டீம் மீட்டிங்.. என்ன பேசினார் ராகுல் டிராவிட்.. வீடியோ வெளியிட்டது பிசிசிஐ

கொழும்பு: 2வது ஒருநாள் போட்டியின் வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்களுடன் ராகுல் டிராவிட் நடத்திய டீம் மீட்டிங்கின் வீடியோவை வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 93 வெற்றிகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இலக்கு

இலக்கு

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 275 ரன்களை எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய அசலங்கா 65 ரன்களும், அவிஷிங்கா 50 ரன்களும், கருணரத்னே 44 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடி இந்திய அணி யின் வெற்றிக்கு வழிவகுத்த தீபக் சாஹருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 82 பந்துகளை சந்தித்த அவர், 69 ரன்களை விளாசினார். இதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த போட்டி முடிந்தவுடனேயே அவசர அவசரமாக இந்திய அணிக்கு டீம் மீட்டிங் ஒன்றை டிராவிட் ஏற்பாடு செய்தார்.

டீம் மீட்டிங்

டீம் மீட்டிங்

இந்நிலையில், போட்டிக்கு பின் நடந்த டீம் மீட்டிங்கின் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நாம் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று நல்ல முடிவை பெற்றுவிட்டோம்; மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஒருவேளை நாம் வெற்றி பெறவில்லை என்றாலும், அதில் வருத்தப்பட எதுவுமில்லை. ஏனென்றால் கடைசி வரை நாம் கடுமையாக போராடினோம். வெற்றி - தோல்விக்கு அப்பாற்பட்டு நாம் எந்தளவிற்கு சண்டை செய்தோம் என்பதே முக்கியம்.

மகிழ்ச்சி

எந்தவொரு தனிப்பட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டங்கள் குறித்து பேசுவதற்கான நேரம் இது கிடையாது. அதெற்கன தனி மீட்டிங் நடத்தும் போது பேசலாம். ஆனால் ஒரு அணியாக அனைவரும் சேர்ந்து சிறப்பாக செயல்பட்டீர்கள். பேட்டிங், பவுலிங் இரண்டுமே சிறப்பாக இருந்தது. பேட்டிங்கின் தொடக்கம் முதல் முடிவு வரையிலுமே வெற்றிகரமாக முடித்துள்ளோம் என ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

Story first published: Wednesday, July 21, 2021, 18:30 [IST]
Other articles published on Jul 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+