Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்!

மும்பை: இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு எதிராக மிகப்பெரிய சவால் காத்துள்ளது.

Recommended Video

T20 Worldcup-க்கு Deadline விதித்த ICC | Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை முடித்துள்ள இந்திய அணி அடுத்த சுற்றுப்பயணத்திற்கு தயாராகியுள்ளது.

ஒரு அணி அயர்லாந்துக்கும், மற்றொரு அணி இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இந்திய அணியில் குறை

இந்திய அணியில் குறை

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆனால் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் ஒரு பெரும் குறை இருந்துக்கொண்டே தான் உள்ளது. அதாவது அவர் பதவியேற்ற பிறகு இதுவரை அயல்நாட்டு மண்ணில் ஒரு தொடரை கூட இந்திய அணி கைப்பற்றவில்லை.

ஒரு வெற்றியும் இல்லை

ஒரு வெற்றியும் இல்லை

சொந்த மண்ணில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளை வைட் வாஷ் செய்து காட்டினார். ஆனால் SENA நாடுகளில் ஒரு தொடர் கூட இன்னும் வெற்றி பெறவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற போது ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இதற்கு காரணம் ராகுல் டிராவிட் கடந்த 8 மாதங்களில் 6 கேப்டன்களுடன் பணியாற்றியது தான் எனக்கூறப்படுகிறது.

மூன்றே வாய்ப்பு தான்

மூன்றே வாய்ப்பு தான்

இந்நிலையில் டிராவிட் தன்னை நிரூபிக்க, அடுத்ததாக இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆசியக்கோப்பை தொடர்கள் உள்ளன. இதில் வெற்றி பெற்றுக்கொடுத்துவிட்டால் ஒட்டுமொத்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துவிடலாம். இதற்காக தீவிர பயிற்சியை வீரர்களுக்கு வழங்கி வருகிறார்.

டிராவிட் ரெக்கார்ட்

டிராவிட் ரெக்கார்ட்

ராகுல் டிராவிட் பதவியேற்றபின் இந்திய அணி ஆடிய போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம். இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவானது. 50 ஓவர் கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி மற்றும் 1 தோல்வியை பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் 11 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளது.

Story first published: Monday, June 20, 2022, 23:03 [IST]
Other articles published on Jun 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+