Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனியும் சும்மா இருக்க முடியாது”.. ரிஷப் பண்ட்-க்கு வந்த சோகம்.. சாட்டையை கையில் எடுத்த டிராவிட்!

ஜோகஸ்ன்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்-ன் பேட்டிங் முறை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Recommended Video

IND vs SA India தோல்விக்கு இதுவே காரணம் –KL Rahul வருத்தம் | Oneindia Tamil

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2வது இன்னிங்ஸின் போது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக விளையாடியது தான் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது.

பண்ட் காரணமா?

பண்ட் காரணமா?

குறிப்பாக இளம் வீரர் ரிஷப் பண்ட் பொறுப்பை உணராமல் விளையாடியதால் தான் மிக குறைந்த இலக்கை நிர்ணயித்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரகானே - புஜாரா போன்றோர் அரைசதம் அடித்து ஓரளவிற்கு ரன்ரேட்டை உயர்த்திய போதும், மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் அதனை பயன்படுத்தவில்லை.

என்ன நடந்தது

என்ன நடந்தது

களத்தில் 2 வீரர்களுமே புதிதாக இருந்த போதும், பண்ட் பொறுமை காக்கவில்லை. 3வது பந்திலேயே இரங்கி வந்து தூக்கி அடிக்க முயன்றார். டி20 ஆட நினைத்த அவரை டக் அவுட்டாக்கி அப்படியே வெளியேற்றினர் தென்னாப்பிரிக்க வீரர்கள். முதல் இன்னிங்ஸில் கூட அவர்17 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். பண்ட்-ன் இந்த மோசமான ஆட்டத்தால் தற்போது புதிய விஷயங்கள் கிளரப்பட்டு வருகின்றன.

முன்னாள் வீரர்கள் காட்டம்

முன்னாள் வீரர்கள் காட்டம்

டி20 போட்டிகளில் அதிரடி காட்டும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்களே டெஸ்ட் தொடரில் நிதானம் காக்கும் போது, ரிஷப் பண்ட் தனது இயற்கையான ஆட்டம் எனக்கூறிக்கொண்டு தவறான முடிவுகளை எடுப்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், கவுதம் கம்பீர் போன்றவர்கள் கடுமையாக சாடியிருந்தார்.

ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனைக்கூட்டம்

இந்நிலையில் பண்ட்- விவகாரத்தில் அணி நிர்வாகம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், ரிஷப் பண்ட் நம்பிக்கையுடன் விளையாடுவார் என்பது நமக்கு தெரியும். அப்படி விளையாடியதால் பல வெற்றிகளை அவர் பெற்றுள்ளதால் தொடர்ந்து அப்படி செய்கிறார். ஆனால் அதற்கென்று சில கால நேரங்கள் உண்டு. அதனை அவர் சரி செய்தே ஆகவேண்டும். இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் பேசி, ரிஷப் பண்ட்-ன் ஷாட் தேர்வுகளுக்காக தனி ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும்.

அட்வைஸ்

அட்வைஸ்

ரிஷப் பண்ட் ஒரு நல்ல அதிரடி ஆட்டக்காரர் இல்லை என யாராலும் கூற முடியாது. அவரிடம் இருக்கும் பிரச்சினை சரியான நேரம் பார்க்காதது தான். களத்திற்கு வந்தவுடன் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு அதன் பிறகு நமது ஆட்டத்தை காண்பிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பண்ட் ஆட்டத்தின் போக்கையே மாற்ற முடியும்.

Story first published: Friday, January 7, 2022, 10:52 [IST]
Other articles published on Jan 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+