Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த 9 மாதம் ரசிகர்களுக்கு விருந்து தான்.. இந்திய அணியின் இடைவிடாத போட்டிகள்.. முழு விவரம் இதோ!

அமீரகம்: இந்திய அணி அடுத்த 9 மாதங்களுக்கு தொடர்ந்து சர்வதேச தொடர்களை திட்டமிட்டுள்ளதால் ரசிகர்களுக்கு விருந்து காத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட செல்லாமல் வெளியேறிவிட்டது.

இதனையடுத்து இந்திய அணியின் அடுத்த தொடர்கள் என்னவென்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 நீண்ட கிரிக்கெட் திட்டம்

நீண்ட கிரிக்கெட் திட்டம்

டி20 உலகக்கோப்பையை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியுள்ள இந்திய அணிக்கு அடுத்ததாக 2022ம் ஆண்டு ஜூலை மாதம் வரை தொடர்ந்து போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் தொடராக வரும் நவம்பர் 17ம் தேதி முதல் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. தற்போது டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு சென்றுள்ள நியூசிலாந்து அணி வரும் நவம்பர் 17ம் தேதி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

இதனை தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு டிசம்பர் 12ம் தேதி முதல் 2022ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி வரை 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் பின்னர் ஜனவரி 11ம்தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகளும், ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் கேப் டவுன் நகரில் 3 டி20 போட்டிகளும், பார்ல் நகரில் 25ம் தேதி 4-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரி்காவுடன் இந்திய அணி மோதுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை

வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை

இந்தத் தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி தாயகம் திரும்பியவுடன், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த அணியுடன் பிப்ரவரி 6ம் தேதி முதல் 20ம்தேதி வரை 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்கு பின்னர் இலங்கை அணி இந்தியாவுக்கு வரவுள்ளது. இங்கு பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது.

மீண்டும் ஐபிஎல்

மீண்டும் ஐபிஎல்

இதன் பின், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 15வது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெறும். இந்த முறை 2 புதிய அணிகள் வருவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்தபின் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு வருகிறது. ஜூன் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளது.

விடுபட்ட டெஸ்ட் போட்டி

விடுபட்ட டெஸ்ட் போட்டி

இந்தத் தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகித்த போது கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. எனவே அந்த கடைசி டெஸ்ட் போட்டியையும் அதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணம் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

Story first published: Thursday, November 11, 2021, 10:18 [IST]
Other articles published on Nov 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+