Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை எல்லாம் நம்பி டீமில் எடுத்ததற்கு.. மொத்த அணியையும் ஏமாற்றிய இளம் வீரர்.. கொதிக்கும் நிர்வாகம்

சிட்னி: இந்திய அணியில் மிடில் ஆர்டரில் கலக்குவார் என்று நம்பி எடுக்கப்பட்ட முக்கியமான இளம் வீரர் ஒருவர் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நீண்ட தொடரில் தற்போது ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிவிட்டது.

ஆனால் இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடி டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையில் தற்போது டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன

என்ன

இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான அணி அறிவிக்கப்பட்ட போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. மிடில் ஆர்டரில் ஆட போகும் வீரர் யார் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. ரோஹித் இல்லாத காரணத்தால் ஓப்பனிங் வீரராக ராகுல் டி 20ல் களமிறங்கினார், மயங்க் ஒருநாள் தொடரில் ஓப்பனிங் இறங்கினார். இதனால் மிடில் ஆர்டரில் யார் ஆடுவது என்று கேள்வி எழுந்தது.

யார்

யார்

இந்த அணியில் மிடில் ஆர்டரில் இதனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஷ்ரேயாஸ் ஒருநாள் தொடரிலும் சரி, டி 20 தொடரிலும் சரி.. இரண்டிலும் சரியாக ஆடவில்லை. இரண்டு தொடரிலும் மிடில் ஆர்டரில் களமிறங்கி 30 ரன்களை கூட ஷ்ரேயாஸ் எடுக்கவில்லை.

மோசம்

மோசம்

இவருக்கு பின் இறங்கிய ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற வீரர்கள் களமிறங்கி 50+ ரன்களை எடுத்த போது ஷ்ரேயாஸ் மிக மோசமாக ஆடினார். ஓப்பனிங் சொதப்பும் போது மிடில் ஆர்டர் வீரர்கள்தான் சிறப்பாக ஆட வேண்டும். ஆனால் இங்கு மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் மிக மோசமாக ஆடினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர் மோசமாக ஆடி மொத்த அணியையும் ஏமாற்றி உள்ளார்.

ரெய்னா

ரெய்னா

இந்த அணியில் ரெய்னா, யுவராஜ் சிங் போன பின்பு மிடில் ஆர்டரில் ஆடுவதற்கு நிறைய பேர் சோதனை செய்யப்பட்டனர். கேதார் ஜாதவ், மனீஷ் பாண்டே, பண்ட், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் என்று பலர் சோதனை செய்யப்பட்டனர். இவர்கள் எல்லோரும் மிடில் ஆர்டரில் மோசமாக சொதப்பினார்கள். இந்த நிலையில் ரோஹித் அணிக்குள் வந்தால் 4வது இடத்தில் ராகுல் களமிறங்கி ஆட முடியும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தோனி இறங்கி ஆடி வந்த 5வது இடத்தில் யார் இறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. 6 மற்றும் 7வது இடத்தில பாண்டியா, ஜடேஜா ஆடுவார்கள் என்பதால் 5வது இடத்தில் இறங்க போகும் அந்த வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. மிகவும் நம்பி எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் இந்த தொடர் முழுக்க மோசமாக சொதப்பியதால் தேர்வுக்குழு அவர் மீது விரக்தியில் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, December 9, 2020, 12:44 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+