Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு அடுத்த விருந்து ரெடி.. இலங்கை புறப்பட்டது இந்திய இளம் படை.. ஆனால் ஒரே ஒரு குறைதான்!

மும்பை: இந்திய 'ஏ' அணி இலங்கை சுற்றுப்பயணத்திற்காக புறப்படுவது குறித்து பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இளம் வீரர்களை அதிகம் கொண்ட இந்திய 'ஏ' அணி அடுத்த மாதம் முதல் இலங்கை அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.

இலங்கை தொடர்

இலங்கை தொடர்

இந்திய அணி வரும் ஜூலை 13ம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். ரவி சாஸ்திரி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இலங்கை தொடருக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

பயோ பபுள்

பயோ பபுள்

கொரோனா பாதுகாப்பு ஏற்பாடாக இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றி பயோ பபுளில் வைக்கப்பட்டனர். அதில் கடந்த 14 நாட்களாக அங்கு தங்கியிருந்து உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த வீரர்கள் நேற்றுடன் தங்களது குவாரண்டைன் காலத்தை முடித்தனர்.

இலங்கை டூர்

இலங்கை டூர்

இந்நிலையில் இன்று இந்திய வீரர்கள் அனைவரும் இன்று காலை இலங்கைக்கு புறப்பட்டுவிட்டனர். இதுகுறித்து புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் நேரடியாக விமானம் மூலம் கொழும்பு-க்கு சென்றடைந்து பின்னர் தனியார் ஓட்டலின் பயோ பபுளில் தங்கவுள்ளனர். ஏனென்றால் போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி அட்டவணை

போட்டி அட்டவணை

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை 13ம் தேதி, முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறை

குறை

ஒருநாள் போட்டி தொடர் தொடங்க இன்னும் 2 வார காலங்கள் உள்ளதால் இலங்கை உள்நாட்டு அணிகளுடன் பயிற்சி ஆட்டம் நடத்த இந்திய வீரர்கள் கோரியிருந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாற்று ஏற்பாடாக இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி ஆட்டம் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, June 28, 2021, 17:16 [IST]
Other articles published on Jun 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+