For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடித்த இங்கிலாந்து.. ப்ளேயிங் 11-ல் செய்த மெகா திட்டம்.. மாற்றம் தேவை!!

பிர்மிங்கம்: இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் டிராவிட்டிற்கு எச்சரிக்கை தரும் வகையில் இங்கிலாந்து அணி ப்ளேயிங் 11-ஐ அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே மீதமுள்ள 5வது டெஸ்ட் போட்டி நாளை மதியம் பிர்மிங்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி 2 -1 என முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசிப் போட்டியில் நாளை நடைபெறுகிறது.

இங்கிலாந்து 11

இங்கிலாந்து 11

இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11-ஐ இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளனர். மேலும் மிடில் ஆர்டரில் ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் என நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய வீரர்களும் இடம் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

எச்சரிக்கை ஒலி

எச்சரிக்கை ஒலி

இந்நிலையில் இங்கிலாந்தின் ப்ளேயிங் 11 மூலம் இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. அதாவது இங்கிலாந்து அணி தனது பவுலிங் படையில் 4 வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுடன் சேர்த்து 5 பேர் ஆகும். 5வது பவுலரின் இடத்திற்கு கூடுதலாக ஒரு முழு நேர பேட்ஸ்மேனை சேர்த்துள்ளனர். அணியில் ஒரு ஸ்பின்னர் கூட இல்லை. தேவைப்பட்டால் ஜோ ரூட் மட்டுமே பகுதி நேர ஸ்பின்னராக இருப்பார்.

இந்தியாவின் திட்டம்

இந்தியாவின் திட்டம்

இந்திய அணியின் வழக்கமான ஃபார்முலாவே 3 வேகப்பந்துவீச்சாளர்கள் 2 ஸ்பின்னர்கள் என்ற கூட்டணி தான். அப்படி இல்லையெனில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் - ஒரு ஸ்பின்னரை பயன்படுத்தும். ஆனால் எட்ஜ்பாஸ்டன் களத்தில் ஸ்பின்னர்களின் பாட்ஷா பழிக்காது எனத்தெரிகிறது. அங்கு முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சு தான் எடுபடும்.

மாற்றம் செய்வாரா டிராவிட்

மாற்றம் செய்வாரா டிராவிட்

எனவே இந்திய அணி வழக்கமான ஃபார்முலாவில் இருந்து வெளியே வந்து 4 வேகப்பந்துவீச்சாளரை பயன்படுத்திவிட்டு, ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் அல்லது ஒரு ஸ்பின்னரை சேர்க்க வேண்டும். அப்படி தவறினால் பெரும் பின்னடைவாக போகும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது, நியூசிலாந்து அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய போது, இந்திய அணி வழக்கமான ஃபார்முலாவின் இறங்கி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 30, 2022, 19:24 [IST]
Other articles published on Jun 30, 2022
English summary
India vs england test ( இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+