Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜனவரி மாதம் தான் கடைசி.. இந்திய அணியில் வரும் மிகப்பெரும் மாற்றம்.. கடைசியில் இந்த நிலைமையா??

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டிக்கு கூட செல்லாமல் வெளியேறியது. அரையிறுதிபோட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதனையடுத்து தோல்விக்கான காரணங்களாக கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய பலர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பிசிசிஐ ஆலோசனை

பிசிசிஐ ஆலோசனை

இந்திய அணியின் தோல்வி குறித்து விசாரணை செய்ய பிசிசிஐ ஆலோசனைக்கூட்டம் நடத்தவுள்ளது. இதில் ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடுகளையும் தர மதிப்பீடு செய்து பவ்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் ராகுல் டிராவிட்டின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டன.

தனி கேப்டன்கள்

தனி கேப்டன்கள்

இந்நிலையில் தற்போது புது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இனி இந்தியாவின் 50 ஓவர் கிரிக்கெட் அணி மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கு தனி தனியாக கேப்டன்களை நியமிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி இனி 50 ஓவர் அணிக்கு ரோகித் சர்மாவும், டி20 கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.

ஜனவரியில் அமல்

ஜனவரியில் அமல்

இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. இலங்கை அணி வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் 3 50 ஓவர் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இந்த மாற்றம் குறித்த அறிவிப்பும் அதற்கான அணி அறிவிப்பின் போதே வெளியாகும்.

டெஸ்ட் கேப்டன் யார்?

டெஸ்ட் கேப்டன் யார்?

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ரோகித் சர்மா தான் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் எனத் தெரிகிறது. அவரின் ஓய்வுக்கு பிறகு டெஸ்டிற்கும் தனி கேப்டன் என்று வந்தால் ஜஸ்பிரித் பும்ரா தான் அதற்கு முதன்மை தேர்வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 13, 2022, 12:10 [IST]
Other articles published on Nov 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+