மீண்டும் இப்படி ஒரு சோதனையா? ராகுலுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழல்.. 3வது போட்டியில் இந்தியா பேட்டிங்
சாட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் வேறு வழியே இன்றி சில மாற்றங்களை செய்ய்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து இந்தியா தொடரை கைவிட்ட சூழலில், ஒயிட் வாஷை தவிர்க்க இன்று களமிறங்குகிறது.
சாட்டோகிராமில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி கேப்டன் லிண்டன் தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த முறையும் இந்தியா டாஸிலேயே ஏமாற்றத்தை கண்டுள்ளது.

3வது போட்டி
போட்டி நடைபெறும் சாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் இந்திய அணி இதுவரை விளையாடியதே இல்லை. இங்கு புற்கள் அதிகமாக இருப்பதால் முதலில் பவுலிங் செய்யும் அணிக்கு சீக்கிரமாக விக்கெட்கள் எடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக முதல் சில ஓவர்களில் நல்ல ஸ்விங் இருக்கும். அந்தவகையில் இந்திய அணிக்கு இந்த 3வது போட்டியில் பின்னடைவாக தான் பார்க்கப்படுகிறது. ஓப்பனிங் வீரர்கள் சற்று நிதானமாக நின்று ஆடினால் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்லலாம்.

2 முக்கிய மாற்றங்கள்
வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் ரோகித் சர்மா காயத்தின் காரணமாக விலகியுள்ளார். இதே போல தீபக் சஹாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரோகித்திற்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

தீபக் சஹாருக்கு மாற்று
தீபக் சஹாரின் இடத்தை இந்த முறை ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் என 3 வேகப்பந்துவீச்சாளர்களே நிரப்பவுள்ளனர். அவருக்கு மாற்று வீரராக கூடுதலாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இவர் தற்போது தான் வங்கதேச தொடருக்காக சேர்க்கப்பட்டார் என்பதால் அவரின் ஃபார்ம் எப்படி உள்ளது என்ற சந்தேகம் உள்ளது.

ப்ளேயிங் 11
கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர்


Click it and Unblock the Notifications