Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா

பெர்மிங்கம்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2 -1 என முன்னிலை வகிக்கும் சூழலில், வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா போட்டியில் இருந்து விலகிவிட்டதால், ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார். துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படவுள்ளார்.

பிட்ச் நிலை என்ன

பிட்ச் நிலை என்ன

இந்த போட்டியில் பேட்டிங்கை விட பவுலிங்கில் இந்தியாவின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது தான் குழப்பமாக உள்ளது. எட்ஜ்பாஸ்டன் பிட்ச்-ல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதற்காக தான் இங்கிலாந்து 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. ஆனால் இந்தியாவின் பலமே ஸ்பின்னர்கள் தான்.

இந்தியாவின் வியூகம்

இந்தியாவின் வியூகம்

எனவே இப்போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர் + 2 ஸ்பின்னர்களுடன் ஆடுமா? அல்லது ஒரே ஒரு ஸ்பின்னரை மட்டும் பயன்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 4 போட்டியிலும் இந்தியா ஒரே ஒரு ஸ்பின்னராக ஜடேஜாவை மட்டுமே பயன்படுத்தியது. அஸ்வின் புறக்கணிக்கப்பட்டார்.

 டிராவிட்டின் திட்டம்

டிராவிட்டின் திட்டம்

இந்நிலையில் தற்போது ராகுல் டிராவிட் பயிற்சியாளாராக இருப்பதால் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது ரவிச்சந்திரன் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி மீண்டும் ஒன்று சேரவுள்ளதாக, அணி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்தியாவின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த இவர்கள், இதிலும் சோபிப்பார்கள் என ராகுல் டிராவிட் முழு நம்பிக்கை வைத்துள்ளார்.

Story first published: Friday, July 1, 2022, 12:10 [IST]
Other articles published on Jul 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+