Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவை வச்சு செய்த ரசிகர்கள்.. பிசிசிஐ வைத்த மெகா செக்.. இனி ஐபிஎல்-லும் கட்டுப்பாடு விதிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா தேசத்திற்கு துரோகம் செய்வதாக கூறி ரசிகர்கள் கோபத்துடன் விளாசி வரும் சூழலில் பிசிசிஐ சார்பில் மறைமுக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு 2 - 0 என முன்னிலையில் உள்ளது.

இந்த 2 போட்டிகளும் வரும் மார்ச் 1ம் தேதி மற்றும் மார்ச் 9ம் தேதிகளில் தொடங்கவுள்ள சூழலில் இதற்கான இந்திய அணி நேற்று தான் அறிவிக்கப்பட்டது. இதிலும் பும்ராவின் பெயர் இல்லாதது தான் சர்ச்சைக்கு காரணம்.

பும்ராவின் காயம்

பும்ராவின் காயம்

கடந்தாண்டு ஜூலையில் நடந்த இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது முதுகில் காயம் ஏற்பட்டு சென்ற ஜஸ்பிரித் பும்ரா, 3 மாதங்களாக ஓய்வில் இருந்தார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பைக்காவது வந்துவிடுவார் என்று நம்பிய போது, செப்டம்பர் மாதம் இரண்டே போட்டிகளில் விளையாடிவிட்டு மீண்டும் காயம் எனக்கூறி சென்றுவிட்டார். அன்று சென்றவர் இன்று வரை இந்திய அணியுடன் இணையாமலேயே தான் இருந்து வருகிறார்.

விமர்சிக்கும் ரசிகர்கள்

விமர்சிக்கும் ரசிகர்கள்

பும்ராவுக்கு முதுகு வலி பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது, அவர் ஆஸ்திரேலியாவுடனான 3வது மற்றும் 4வது டெஸ்டிற்கு வந்துவிடுவார் எனக்கூறினர். எனினும் கடைசி நேரத்தில் அவருக்கு என்.சி.ஏ அதிகாரிகள் ஃபிட்னஸ் சான்றிதழ் கொடுக்கவில்லை என்பதால் சேர்க்கவில்லை. இதன் மூலம் இனி பும்ரா ஐபிஎல் தொடருக்கு தான் நேரடியாக வருவார் என்பது நிரூபணமாகியுள்ளது.

பிசிசிஐ-ன் பதில்

பிசிசிஐ-ன் பதில்

இதனை கேட்ட ரசிகர்கள் பும்ராவுக்கு தேசத்தை விட ஐபிஎல்-ல் ஆடுவது தான் முக்கியம். அதிக பணம் கிடைக்கும் ஐபிஎல்-ல் விளையாடுவதற்கு மட்டும் அவருக்கு காயம் இருக்காது எனக்கூறி விளாசி வருகின்றனர். இந்நிலையில் இதற்கெல்லாம் பிசிசிஐ மறைமுகமாக பதில் தந்துள்ளது. அதாவது ஐபிஎல்-க்கு சென்றாலும் ஜஸ்பிரித் பும்ராவால் முழுமையாக விளையாட முடியாது என கூறியுள்ளனர்.

பணிச்சுமை பிரச்சினை

பணிச்சுமை பிரச்சினை

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இந்தாண்டு பல வீரர்களின் செயல்பாட்டையும் ஐபிஎல்-ல் கவனிக்கவுள்ளனர். பெங்களூருவில் கடந்த 10 நாட்களில் 2 பயிற்சி போட்டிகளில் பும்ரா விளையாடியுள்ளார். அதில் தொடர்ச்சியாக பந்துவீசினால் பிரச்சினை ஏற்படுவது தெரியவந்துள்ளது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

எனவே ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ பயிற்சியாளர்களும், மருத்துவர்கள் நன்கு கவனிப்பதுடன், பணிச்சுமையை குறைப்பதற்காக சில போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டார்கள் எனக்கூறியுள்ளனர். ஐபிஎல் கடமையை ஓரளவிற்கு முடித்துவிட்டு, நேரடியாக தேசத்திற்கான பணியில் சேர வேண்டும் என கூறியுள்ளனர்.

Story first published: Monday, February 20, 2023, 18:43 [IST]
Other articles published on Feb 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+