
டி20 உலகக்கோப்பை அட்டவணை
இந்நிலையில் இந்த தொடரின் அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டி20 உலகக்கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. தகுதி சுற்றுகள் மேலும் 2 அணிகள் இதில் இடம்பெறும்.

இந்திய அணி போட்டிகள்
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 23ம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 27ம் தேதியன்று தகுதிச்சுற்றில் இடம்பெறும் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.

கடைசி போட்டிகள்
3வது போட்டி அக்டோபர் 30 தென்னாப்பிரிக்க அணியுடன் பெர்த் மைதானத்தில் மோதுகிறது. இதன் பின்னர் நவம்பர் 2ம் தேதி வங்கதேச அணியுடனும், நவம்பர் 6ம் தேதி தகுதிப்பெறும் அணியுடனும் விளையாடவுள்ளது. இந்த 5 போட்டிகளில் செயல்படுவதை வைத்து இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லும்.

இந்திய படை
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங்


Click it and Unblock the Notifications











