Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளீஸ் வேண்டாம்.. ஒன்றரை வருஷமா விளையாடலை.. மூத்த வீரரை அப்படியே ஓரம்கட்டும் இந்திய அணி.. பின்னணி

சென்னை: இந்திய அணியில் காயம் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக ஆடாமல் கஷ்டப்பட்டு வந்த மூத்த வீரர் ஒருவரை மொத்தமாக நீக்கும் எண்ணத்தில் அணி நிர்வாகம் இருக்கிறது.

ஆஸ்திரேலியா தொடருக்கு அடுத்த மிக முக்கியமான கிரிக்கெட் தொடரான இங்கிலாந்து - இந்தியா இடையிலான தொடர் இந்த வாரம் தொடங்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது.

டெஸ்ட் உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்திய அணி இந்த தொடரில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

காயம்

காயம்

இந்த நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா தற்போது அணியில் இணைக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஆடும் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமான விஷயமாக உள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் மீண்டும் அணிக்குள் திரும்பி இருக்கிறார்.

அணிக்குள் திரும்பினார்

அணிக்குள் திரும்பினார்

கடந்த ஐபிஎல் தொடரின் போது இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. பயிற்சியின் போதே இவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் ஐபிஎல் தொடர் முழுக்க ஆடவில்லை. இதனால் ஆஸ்திரேலிய தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

அதற்கு முன்பும் கொரோனா காரணமாக போட்டிகள் தள்ளிப்போனது. இதனால் இஷாந்த் சர்மா மொத்தமாக பார்ம் இழந்தார். கடந்த ஒன்றரை வருடமாக இவர் வலைப்பயிற்சி கூட மேற்கொள்ளவில்லை. இதனால் இவர் எப்படிப்பட்ட பார்மில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

சந்தேகம்

சந்தேகம்

இதன் காரணமாக இவருக்கு முதல் இரண்டு டெஸ்டில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள். வலைப்பயிற்சியை தொடங்கிய பின் இவரின் பவுலிங்கை பார்த்துவிட்டு மூன்றாவது அல்லது நான்காவது டெஸ்டில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.

யார்

யார்

இவருக்கு வயதாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதனால் சிராஜுக்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். இஷாந்த் சர்மா மீண்டும் ஆடும் அணிக்குள் வருவது கொஞ்சம் கஷ்டம்தான்.

Story first published: Monday, February 1, 2021, 14:15 [IST]
Other articles published on Feb 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+