For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தயாராக இருங்கள்.. கோலிக்கு சென்ற முக்கிய மெசேஜ்.. பதறிப்போன கேப்டன்.. 2 மூத்த வீரர்கள் செய்த சதி!

சென்னை: இந்திய அணியில் விரைவில் கேப்டன் கோலி மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய தோல்வி அடைந்தால் இந்த மாற்றம் கண்டிப்பாக ஏற்படலாம்.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி தற்போது சென்னையில் படுதோல்வி அடைந்துள்ளது. 227 ரன்களை வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தி உள்ளது.

இதனால் மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஒரு கேப்டனாக கோலிக்கு இது பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.
எப்படி

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடுவதற்கு இந்திய அணி கண்டிப்பாக மீதம் இருக்கும் மூன்று போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் கேப்டன் கோலிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த தொடரில் தோல்வி அடைந்தால் அது கேப்டன் கோலிக்கு சிக்கலாக மாறும் என்று கூறுகிறார்கள்.

 சிக்கல்

சிக்கல்

இந்திய அணியில் விரைவில் கேப்டன் கோலி மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய தோல்வி அடைந்தால் இந்த மாற்றம் கண்டிப்பாக ஏற்படலாம். மூன்று முக்கியமான காரணங்களால் கோலியின் கேப்டன்சி மாற்றப்படலாம் என்கிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வி அடைந்தால் ஹோம் டூரில் இந்திய அணி தோல்வி அடையும். அதேபோல் டெஸ்ட் சாம்பியன்சிப் செல்லும் வாய்ப்பை இழக்கும். இதனால் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து கோலி மொத்தமாக நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

இரண்டாவதாக கோலியின் பேட்டிங் சமீப காலமாக சரியாக இல்லை. கேப்டன்சி காரணமாக அவரின் பேட்டிங் ஒருவேளை மோசமாகி இருக்கலாம். இதனால் அவருக்கு பிரஷரை குறைக்கும் வகையில் கேப்டன்சியில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

மூன்றாவது காரணம்

மூன்றாவது காரணம்

மூன்றாவதாக ரஹானே கேப்டன்சியின் கீழ் இந்திய வீரர்கள் இன்னும் சிறப்பாக ஆடுகிறார்கள். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் ரஹானே வீழ்த்திவிட்டார். இதனால் டெஸ்ட் கேப்டன்சியை மட்டும் ரஹானேவிடம் இந்திய அணி கொடுக்க வாய்ப்புள்ளது என்றும் பேச்சு அடிபடுகிறது .

சதி

சதி

இரண்டு மூத்த வீரர்கள் இந்திய அணியில் சரியாக ஆடுவது இல்லை. ரோஹித், ரஹானே ஆகியோர் கோலியின் கேப்டன்சியின் கீழ் சரியாக ஆடுவது இல்லை. இது சமயங்களில் இந்திய அணியின் முடிவையும் பாதிக்கிறது. இவர்களின் பார்ம்தான் தற்போது கோலியின் கேப்டன்சிக்கு எதிராக திரும்பி உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

நம்பிக்கை

நம்பிக்கை

ரோஹித், ரஹானே போன்றவர்களை நம்பி கோலி இறங்குகிறார். ஆனால் இவர்கள் ஆடாமல் அவுட்டாகி விடுகிறார்கள். இதனால் தற்போது கோலிக்கு பிரஷர் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கேப்டன்சி மாற்றப்படலாம் என்ற தகவல் கோலிக்கும் சென்றுவிட்டது என்கிறார்கள்.

மாற்றப்படலாம்

மாற்றப்படலாம்

இதனால் கோலியும் எப்படியாவது 3-1 என்று இந்த தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறார். ஏதாவது செய்து அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கோலி திட்டமிட்டுள்ளார். மீதம் இருக்கும் போட்டிகளே இந்திய அணியின் எதிர்காலத்தை, கோலியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்கிறார்கள்.

Story first published: Wednesday, February 10, 2021, 17:08 [IST]
Other articles published on Feb 10, 2021
English summary
Team India may remove Kohli from captaincy if they fail to clinch the series against England in test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+