Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் ஜோக்கராகிறார் தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர்

டெல்லி: உலக கோப்பை தொடரில் தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கரை, 4வது இடத்தில் ஜோக்கராக பயன்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

கிரிக்கெட் உலகின் முக்கிய திருவிழாவான உலக கோப்பை தொடர் இம்முறை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. மே 30ம் தேதி தொடங்கி ஜூன் 14ம் வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என்று 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. 1992ம் ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலககோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.

முழு வீச்சில் தயார்

முழு வீச்சில் தயார்

அந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி, முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான வாய்ப்பாக ஐபிஎல் தொடரும் அமைந்திருக்கிறது.

4வது வீரர்

4வது வீரர்

இப்போதுள்ள நிலவரப்படி... அணியில் யார், யார் எந்த வகையில் இடம்பெற போகிறார்கள் என்பது ஓரளவு ஊர்ஜிதமாகி விட்டது. ஆனால்... அணிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்து இருப்பது யாரை 4வது வீரராக களமிறக்குவது என்பது தான்.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

பலரை அந்த இடத்தில் இறக்கி விட்டாலும் பலன் என்னவோ பூஜ்யம் தான். எனவே... தற்போது மாற்று வகையில் பிரம்மாஸ்திரமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம் என்று பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது.

அணியின் ஜோக்கர்

அணியின் ஜோக்கர்

அதாவது... அந்த இடத்தில் ஒரு வீரரை ஜோக்கராக பயன்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அந்த வீரரை அணியின் எந்த சூழ்நிலைக்கும் பயன்படுத்துவது.

2003, 2011 தொடர்கள்

2003, 2011 தொடர்கள்

இன்னும் சொல்ல போனால்... அந்த இடத்துக்கு முக்கிய வீரரை ஜோக்கராக பயன்படுத்துவது ஆகும். அதற்கான உதாரணங்களாக 2003 மற்றும் 2011ம் ஆண்டு உலக கோப்பை தொடரை மறக்காமல் பிசிசிஐ சுட்டிக்காட்டுகிறது.

தீர்வாக அமையும்

தீர்வாக அமையும்

ஆக மொத்தத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் அணியின் இக்கட்டான சூழ்நிலையை மாற்றும் பொருட்டு இந்த யோசனை அதற்கு தீர்வாக அமையும் என்று பிசிசிஐ திடமாக நம்புகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு உறுதி என்று நம்பலாம்.

Story first published: Wednesday, March 20, 2019, 17:18 [IST]
Other articles published on Mar 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+