நாடு திரும்பினார் டோணி... மற்றவர்களும் தாயகம் வந்து சேர்ந்தனர்
மும்பை: கேப்டன் டோணி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணியினர் அனைவரும் இந்தியா திரும்பினர்.
கேப்டன் டோணி, துணை கேப்டன் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட அனைவருமே தாயகம் திரும்பி விட்டனர். அனைவரும் பகுதி பகுதியாக வெவ்வேறு ஊர்களில் வந்து இறங்கி அவரவர் இருப்பிடம் சென்றனர்.

டோணி டெல்லியில் வந்து இறங்கினார். கோஹ்லி, தனது காதலி அனுஷ்கா மற்றும் ஐந்து வீரர்களுடன் மும்பை வந்து சேர்ந்தார். ரவி சாஸ்திரியும் மும்பையில் வந்து இறங்கினார்.
கிட்டத்தட்ட மொத்த அணியும் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியினருக்கு எதிராக எந்த விமான நிலையத்திலும் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் வீரர்கள் வந்து இறங்கி புறப்பட்டுச் சென்றனர்.
Story first published: Sunday, March 29, 2015, 10:55 [IST]
Other articles published on Mar 29, 2015


Click it and Unblock the Notifications