
அதிர்ச்சி தோல்வி
விராட் கோலி காயத்தால் பாதிக்கப்பட்டதால் 2வது டெஸ்டில் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியை 266 ரன்களுக்குள் சுருட்டியபோதும், 2வது இன்னிங்ஸில் 240 ரன்களை அசால்டாக விட்டுக்கொடுத்துள்ளனர். சில இடங்களில் விராட் கோலியின் அறிவுரைகள் இருந்திருந்தால் இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியில் வென்றிருக்கலாம்.

என்ன காரணம்
இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 240 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்திருந்தது. இவ்வளவு குறைவான இலக்கை கட்டுப்படுத்த இந்திய பவுலர்களுக்கு முதலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற உத்வேகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் டீன் எல்கர் அமைத்த பார்ட்னர்ஷிப்பை பார்த்த பும்ரா, ஷமி, ஷர்துல் ஆகியோர் விரக்தியில் அதிகப்படியான எக்ஸ்ட்ரா ரன்களை விட்டுக்கொடுத்து தவறு செய்தனர்.

கோலி இருந்தால்
விராட் கோலி போன்ற மிகவும் ஆக்ரோஷம் மிகுந்த கேப்டன் அங்கிருந்திருந்தால், எக்ஸ்ட்ரா ரன்கள் சென்றிருக்காது. அவரின் துடிப்பும், நம்பிக்கையும் இந்திய பவுலர்களுக்கு வெற்றி நம்பிக்கையை அதிகரித்திருக்கும். ஒவ்வொரு பந்தின் போதும் பவுலரிடம் புதிய திட்டத்தை கூறி பார்ட்னர்ஷிப்பை உடைத்திருப்பார்.

பவுலிங் திசை
இதே போல பவுலர்கள் வீசிய லெந்தை கே.எல்.ராகுல் கண்டுக்கொள்ளவே இல்லை எனத் தெரிகிறது. ஈரப்பதம் மிகுந்த பிட்ச்-ல் அவுட்சைட் திசையில் ஸ்விங் செய்திருந்தால் விக்கெட் விழ வாய்ப்பு உருவாகியிருக்கும். ஆனால் இந்திய பவுலர்கள் தொடர்ச்சியாக ஸ்டம்ப் லைனில் தான் நேராக பந்துவீசி வந்தனர். இதனால் வேகமாக பவுண்டரிகள் பறந்தன. இந்த இடத்தில் விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் பிட்ச்-ன் தன்மையை பொறுத்து பவுலர்களின் லெந்த்-ஐ மாற்றியிருப்பார்.
Recommended Video

ரகானேவின் தவறும்
கோலி இல்லையென்றாலும், அஜிங்கியா ரகானே பொறுப்பை உணர்ந்து கே.எல்.ராகுலிடம் அறிவுரைகள் கூறியிருக்க வேண்டும் என்பது முன்னாள் வீரர்களின் குற்றச்சாட்டு. ரகானேவின் தலைமையில் இந்தியா இதுவரை ஒரு டெஸ்டில் கூட தோல்வியை சந்தித்ததில்லை. எனவே அவரின் யோசனை முக்கியமானதாக அமைந்திருக்கலாம். இப்படி முக்கிய விஷயங்களை இந்திய அணி ஒரே போட்டியில் தவறவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications