மாலை 7 மணிக்கு அறிவிக்கப்படுகிறார் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்...! வருகிறார் ரவிசாஸ்திரி?
மும்பை: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பது இன்று மாலை 7 மணிக்கு அறிவிக்கிறது கிரிக்கெட் ஆலோசனைக் குழு.
உலக கோப்பை முடிந்துவிட்டது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. உலக கோப்பையுடன் ரவி சாஸ்திரி உள்ளிட்டோரின் பதவி காலம் முடிந்தது. ஆனாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடியும் வரை 45 நாட்களுக்குபயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நீட்டித்துள்ளது.
பயிற்சியாளர் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு, 2 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விட்டன. பயிற்சியாளர்கள் போட்டியில் 6 பேர் இருப்பதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. அந்த 6 பேரில் பயிற்சியாளருக்கான நேர்காணல், ரவி சாஸ்திரி பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறார்

6 போட்டியாளர்கள்
ரவி சாஸ்திரி தவிர, ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி, நியூசிலாந்து முன்னாள் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பயிற்சியாளர் மைக் ஹெவ்ஸன் ஆகியோரும் உள்ளனர். 2007ம் ஆண்டு உலக டி 20 வென்ற அணியின் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் ராபின் சிங் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் பில் சிம்மன்ஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இன்றே நேர்காணல்
முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு 6 வேட்பாளர்களை நேர்காணல் செய்யும். அதன் பிறகு தலைமை பயிற்சியாளர் குறித்த முடிவை இன்றே அறிவிக்கும்.

ரவிசாஸ்திரியே தான்
யார் எப்படி இருந்தாலும், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே தனது பதவியை தக்கவைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. ஆனால் இவரது நியமனத்தை ரசிகர்கள் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கோலியின் பரிந்துரை
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் கிளம்புவதற்கு முன் கேப்டன் விராட் கோலி, பேசிய விஷயம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன்படி, ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். நடக்கும் விஷயங்களை பார்த்தால் அப்படி தான் இருக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications