Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு ஆர்வமே இல்லை.. கேப்டன்சி போனதும் அடங்கிய ரஹானே.. ரோஹித்தும் பேசலையாம்.. ஓ அதுதான் காரணமோ?

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு வீரர்களின் ஆர்வமின்மையே காரணம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி தற்போது படுதோல்வி அடைந்துள்ளது. 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தி உள்ளது.

இதனால் மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஒரு கேப்டனாக கோலிக்கு இது பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

எப்படி

எப்படி

இந்திய அணி இதில் எளிதாக வெல்லும் என்று பலரும் கருதிய நிலையில் மண்ணை கவ்வி உள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டாலும் வீரர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என்கிறார்கள். கோலிக்கு பெரிய சப்போர்ட் இல்லை , கோலியும் ஈகோவை விட்டுவிட்டு பெரிதாக போய் வீரர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக துணை கேப்டன் ரஹானே முதல் இன்னிங்சில் சில சமயம் பவுலர்களிடம் பேசினார். அதன்பின் அவர் எந்த ஆலோசனையும் சொல்லவில்லை. முழுக்க முழுக்க கோலி மட்டுமே தனி நபராக முடிவு எடுத்தார். கோலி - ரஹானே களத்தில் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

அதேபோல் கேப்டன்சி போன பின்பு ரஹானே பெரிதாக எந்த பங்களிப்பும் கொடுக்கவில்லை. இவரின் பேட்டிங் பார்ம் கடந்த 10 போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக இல்லை. இப்போது கேப்டன்சி இல்லாத காரணத்தால் இன்னும் மோசமாகி உள்ளது. கோலி ரஹானே இடையே பெரிய அளவில் உரசல் எல்லாமும் இல்லை. ஆனாலும் இவர்கள் ஏனோ ஆலோசனை செய்வது இல்லை.

ஆலோசனை

ஆலோசனை

கோலிக்கு ஆலோசனை தேவை இல்லை என்று ரஹானே கருதி இருக்கலாம். அல்லது கோலி தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். ஆனால் ரஹானேவின் பங்களிப்பு இந்த போட்டியில் சுத்தமாக இல்லை என்பதே உண்மை . இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய டெஸ்டில் ஆலோசனைகளை வழங்கிய ரோஹித்தும் இந்த டெஸ்டில் அமைதியாக இருந்தார்.

பேசவில்லை

பேசவில்லை

களத்தில் ரோஹித் சர்மா ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாக இருந்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. கோலி கேப்டன்சிக்கு கீழ் வீரர்கள் எல்லோரும் பெட்டி பாம்பு போல அடங்கி போய் உள்ளனர். கோலியின் ஈகோ மற்றும் அவர் மீது இருக்கும் பயம்தான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள்.

 காரணம் என்ன

காரணம் என்ன

கோலி பெரிதாக ஆலோசனைகளை கேட்க மாட்டார். அவரே முடிவு எடுப்பார். கம்பீர், தோனி போன்றவர்கள் மட்டுமே கோலியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள். தற்போது இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் எல்லோரும் கோலிக்கு பயந்தவர்கள்தான் என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, February 10, 2021, 9:18 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+