Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா பாருங்க.. டீவியில் போட்டுக்காட்டிய கோச்.. சென்னை டெஸ்டுக்கு இந்திய அணி எடுத்த அஸ்திரம்.. மாஸ்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடக்க உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணி சிறப்பாக திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.

டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

 சென்னை

சென்னை

டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடக்க உள்ளது. சென்னையில் தற்போது வீரர்கள் இதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடக்க உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணி சிறப்பாக திட்டங்களை வகுத்து வருகிறது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஜோஸ் பட்லர் போன்ற வீரர்களை எப்படி வீழ்த்த வேண்டும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எப்படி சாய்க்க வேண்டும் என்று திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

வீடியோ

வீடியோ

இதற்காக இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி கையில் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் ஸ்பின் பவுலர்களிடம் திணறினார்கள். ஆல் அவுட்டும் கூட ஆனார்கள். இதனால் இங்கிலாந்து வீரர்களின் வீக்னஸ் எது என்று இந்திய அணி கண்டுபிடித்துள்ளது.

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

ஒவ்வொரு வீரரும் எப்படிப்பட்ட பவுலிங்கில் திணறுகிறார், எங்கே சறுக்குகிறார் என்று இந்திய அணியின் பயிற்சி குழு வீரர்களுக்கு வீடியோ போட்டுக் காட்டியுள்ளது. அதோடு இங்கிலாந்து பவுலர்கள் எப்படி வீசுகிறார்கள், எந்த பவுலருக்கு எப்படி பீல்டிங் நிற்க வைக்கப்படுகிறது என்பதையும் போட்டிக்காட்டியுள்ளனர்.

உதவியது

உதவியது

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதும் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கு இதேபோல் செய்யப்பட்டது. அப்போதும் கூட இதேபோல் இந்திய அணி வீரர்களுக்கு வீடியோ போடப்பட்டது. அதை தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் பயன்படுத்த உள்ளனர்.

பயிற்சி

பயிற்சி

இந்திய அணியின் பயிற்சியில் இது முக்கிய பங்கு வகிக்கும். இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ஏற்றபடி திட்டங்களை வகுக்க முடியும். இதனால் இங்கிலாந்து தொடர் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.

Story first published: Monday, February 1, 2021, 9:47 [IST]
Other articles published on Feb 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+