Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்மில் ரிஷப் பண்ட்-ன் முரட்டுத்தனம்... சவால் விடும் சீனியர் வீரர்கள்.. வைரலாகும் பிசிசிஐ வீடியோ!

மும்பை: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி வீரர்கள் முரட்டுத்தனமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறவுள்ளது.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை முடித்துவிட்டு இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஆக.4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி வரும் ஜூன் 2ம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து பறக்கவுள்ளனர்.

பிசிசிஐ பபுள்

பிசிசிஐ பபுள்

தற்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் இந்திய அணிக்காக 14 நாட்கள் குவாரண்டைன் பபுளை பிசிசிஐ அமைத்துள்ளது. மும்பை ஹயாத் ஹோட்டலில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பபுளில் கடந்த மே.19ம் தேதி வீரர்கள் அனைவரும் நுழைந்தனர். அவர்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இந்நிலையில் பபுளில் இருக்கும் இந்திய வீரர்கள், நியூசிலாந்துக்கு டெஸ்டுக்கு தயாராகி வரும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், ஹோட்டலுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள பெரியளவிலான ஜிம்மில், வீரர்கள் முரட்டுத்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தயாராகும் விதத்தில் இருந்து மீண்டும் ஒரு அதிரடி விருந்து காத்துள்ளது என்பது தெரிகிறது.

அதிரடி

அதிரடி

பண்ட் உடன் இணைந்து இளம் வீரர்கள் முகமது சிராஜ், சுப்மன் கில் ஆகியோர் மட்டுமின்றி சீனியர் வீரர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோரும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள முகமது ஷமி ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசினார். அவர் நியூசிலாந்து தொடரில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 26, 2021, 16:55 [IST]
Other articles published on May 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+