Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பயந்து நடுங்கிய இந்திய வீரர்கள்".. இனியும் அவரை பார்த்து அஞ்ச முடியாது..அணிக்குள் நடக்கும் மாற்றம்

சென்னை: இந்திய அணியில் கேப்டனாக கோலி இருக்கும் போது அணியில் இருக்கும் வீரர்கள் பயத்தோடு இருப்பதாகவும், ரஹானேவிற்கு கீழ் சுதந்திரமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Captain Kohli-யிடம் மாற்றங்கள் வருமா? | Oneindia Tamil

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியா மோதிய மிக நீண்ட டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது.

வெற்றி

வெற்றி

இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இந்திய அணியை வழி நடத்திய ரஹானே பாராட்டப்பட்டு வருகிறார். முக்கியமாக இந்திய அணியை கேப்டன் ரஹானே மிகவும் சிறப்பாக வழி நடத்தினார். அணியின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார்.

காரணம்

காரணம்

இந்த நிலையில் இந்திய அணியில் கேப்டனாக கோலி இருக்கும் போது அணியில் இருக்கும் வீரர்கள் பயத்தோடு இருப்பதாகவும், ரஹானேவிற்கு கீழ் சுதந்திரமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கோலி கேப்டனாக இருக்கும் சமயங்களில், வீரர்களை அதிகமாக கட்டுப்படுகிறார். அவர்கள் சுதந்திரமாக இல்லை.

கருத்து

கருத்து

வீரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள், திட்டங்களை கோலி மதிப்பது இல்லை. வேறு வீரர்கள் கருத்து சொன்னால் அதை கோலி செவி மடுத்து கேட்பது இல்லை. சமயங்களில் பயிற்சியாளர் சொல்வதை கூட கோலி காது கொடுத்து கேட்பது இல்லை. கோலி வைத்ததே சட்டமாக இருக்கிறது, என்று கூறப்படுகிறது. ஆனால் ரஹானேவிற்கு கீழ் அணி சுதந்திரமாக உள்ளது.

பேச்சு

பேச்சு

இளம் வீரர்கள் தொடங்கி எல்லோரின் கருத்தையும் ரஹானே கேட்கிறார். சரியான முடிவுகளை எடுக்கிறார். பெரிதாக ஈகோ பார்ப்பது இல்லை. நன்றாக டீம் ஒர்க் பார்க்கிறார்.வீரர்கள் இவருக்கு கீழ் பயப்படுவது இல்லை. இதனால் அவர்களின் திறமை வேகமாக வெளிப்படுகிறது.

வெற்றி

வெற்றி

சிராஜ், விஹாரி, சுந்தர் போன்ற வீரர்கள் ரஹானேவிற்கு கீழ் ஜொலிப்பதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ரஹானே ஒரு கேப்டனாக அணிக்குள் நல்ல பெயர் எடுத்துள்ளார். கோலியை விட சிறப்பாக செயல்படுகிறார் என்று பெயர் எடுத்துள்ளார். இது கோலியின் கேப்டன்சியில் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும்.

மாற்றம்

மாற்றம்

கோலி ரஹானே கேப்டன்சியின் மதிப்பை உணர்ந்து இருக்கிறார். கண்டிப்பாக கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மற்ற வீரர்களின் கருத்தை கேட்பார் என்கிறார்கள். கோலி முன்பு போல தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. அவரிடம் இருந்த லகான் தற்போது அவிழ்ந்துவிட்டது. இனி இந்திய அணி டீம் ஒர்க் பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, February 2, 2021, 10:01 [IST]
Other articles published on Feb 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+