Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ அங்கதான் இருக்கீங்களா?.. சென்னையில் இந்திய அணி தங்கியிருக்கும் ஹோட்டல்.. போட்டோவை பாருங்க!

சென்னை: சென்னையில் இந்திய அணி வீரர்கள் எந்த இடத்தில் தங்கி இருக்கிறார்கள் என்று விவரம் வெளியாகி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையே அடுத்த வாரம் நடக்க உள்ள கிரிக்கெட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து சென்னையில் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. ஆனால் இந்த தொடரை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொரோனா

கொரோனா

கொரோனா காரணமாக இந்த டெஸ்ட் போட்டி இரண்டிற்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தொடரில் ஆட உள்ள இங்கிலாந்து வீரர்கள் தற்போது சென்னை வந்துள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி முடித்துவிட்டு இங்கிலாந்து அணி சென்னை வந்துள்ளது.

 இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களும் சென்னை வந்துள்ளனர். சென்னையில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டு அணி வீரர்களுக்கும் 3 முறை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் எல்லோருக்கும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது.

எங்கே

எங்கே

இந்த நிலையில் சென்னையில் இந்திய அணி வீரர்கள் எந்த இடத்தில் தங்கி இருக்கிறார்கள் என்று விவரம் வெளியாகி உள்ளது. சென்னையில் ஈசிஆர் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டலில் இவர்கள் உள்ளனர். வங்க கடலுக்கு அருகே இருக்கும் ஈசிஆர் சாலையில் உள்ள சொகுசு ஹோட்டலில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

எப்படி

எப்படி

இவர்கள் எல்லோருக்கும் கடலை பார்க்கும் வகையில் பால்கனி வைத்த ஹோட்டல் அறை கொடுக்கப்பட்டுள்ளது . கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரோஹித் சர்மா ஹோட்டலில் தங்கி இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

 போட்டோ

போட்டோ

ரோஹித் சர்மா கடலை பார்த்து தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்திய வீரர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இதேபோல் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Story first published: Friday, January 29, 2021, 10:49 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+