ரசிகர்களை கடுப்பாக்கும் இந்திய வீரர்கள்.. மனைவிகளுடன் இங்கிலாந்தில் ஜாலி டூர்.. வைரல் புகைப்படங்கள்!
இங்கிலாந்து : டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் ஜாலியாக குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இந்திய அணி.
இதனையடுத்து அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சுற்றுப்பயணம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 5 வார காலம் உள்ளதால் இந்திய வீரர்கள் தற்போது மனைவிகளுடன் ஜாலியாக இங்கிலாந்தை சுற்றி வருகின்றனர்.

கோலி - அனுஷ்கா ஷர்மா
இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் குழந்தை ஆகியோரும் இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விராட் கோலி, தன் மனைவியுடன் காலை உணவு அருந்துவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

மயங்க் அகர்வால்
வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தங்களது மனைவிகளுடன் இங்கிலாந்தில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்களையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

ரோகித் சர்மா
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அஜிங்கியா ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விளையாட்டு பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்களது குழந்தைகளுக்காக நேரத்தை செலவிட்டு, மகிழ்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின்
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது மனைவி ப்ரீத்தி நாராயணனுடன் சேர்ந்து இங்கிலாந்தின் கடற்பகுதிகளில் சுற்றி வருகிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications