நீக்கப்பட்ட மூத்த வீரர்.. ஆஸி.க்கு எதிரான 3வது டெஸ்ட்.. இந்திய அணி அறிவிப்பு..2 முக்கிய மாற்றங்கள்
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆட போகும் இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்க உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.இதற்கு பதிலடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றியை ருசித்தது.

அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆட போகும் இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டு உள்ளது. இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு உள்ளார். இதனால் இந்திய அணிக்குள் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம்
இந்திய அணியில் தற்போது ரோஹித் சர்மா இணைந்துள்ளார். காயம் காரணமாக இவர் ஒருநாள், டி 20 தொடரில் ஆடவில்லை. அதேபோல் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா ஆடவில்லை. தற்போது இவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீக்கம்
இந்திய அணியில் ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் சரியாக ஆடவில்லை. ஒருநாள் போட்டியிலும் இவர் சரியாக ஆடவில்லை. டெஸ்ட் போட்டியிலும் இவர் சரியாக ஆடவில்லை. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் உமேஷ் யாதவிற்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்
அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா, ஜடேஜா, பண்ட், விஹாரி, பும்ரா, சிராஜ், அஸ்வின், சைனி ஆகியோர் ஆட உள்ளனர்.


Click it and Unblock the Notifications