Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டார் வீரரகளின் கம்பேக்.. சூடுபிடித்த 2வது டி2௦.. இந்திய பிளேயிங் 11 இதோ

மவுண்ட் மௌங்கனி: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11 இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன.

இதில் முதல் டி20 போட்டி கடந்த நவம்பர் 18ம் தேதியன்று மழையினால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. 2வது டி20 போட்டி நாளைய தினம் நடைபெறவிருக்கிறது.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளுமே டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று வரை சென்று மோசமான தோல்வியுடன் வெளியேறியுள்ளன. ரோகித் சர்மா இல்லாததால் ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. எனவே அதில் இருந்து கம்பேக் கொடுப்பதற்காக தீவிர முணைப்பு காட்டி வருகின்றன.

வீரர்கள் தேர்வு

வீரர்கள் தேர்வு

இந்நிலையில் வெற்றிக்காக ப்ளேயிங் 11 மிகவும் பலமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஓப்பனிங்கிற்கு மொத்தமாக சுப்மன் கில், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் என 4 பேர் ரெடியாக உள்ளனர். இதில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் வாய்ப்பை பெறுவார்கள் எனத் தெரிகிறது. முதல் விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் 2வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ் ஆடவுள்ளனர்.

சஞ்சு சாம்சன் நிலை

சஞ்சு சாம்சன் நிலை

இவர்களை தொடர்ந்து மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் ஆகியோர் செயல்படலாம். அனைவரும் எதிர்பார்த்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் பண்ட் தான் வாய்ப்பு தர வேண்டும். லோயர் ஆர்டரில் ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம் எனத்தெரிகிறது. சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.

பவுலிங் படை

பவுலிங் படை

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் டி20 உலகக்கோப்பையில் கலக்கிய அர்ஷ்தீப் சிங் முதன்மை தேர்வாக உள்ளார். அதிவேக புயல் உம்ரான் மாலிக் மீண்டும் அணிக்குள் வரவுள்ளதாக தெரிகிறது. 3வது பவுலராக புவனேஷ்வர் குமார் அல்லது முகமது சிராஜ் ஆகிய இருவரில் யாரோ ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

சுப்மன் கில், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட்/ சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார்

Story first published: Saturday, November 19, 2022, 23:55 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+