Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேரத்தில் விலகிய வீரர்.. விக்கெட் கீப்பருக்கு பஞ்சம்.. முதல் ODIக்கான இந்திய ப்ளேயிங் 11 இதோ!

ஐதராபாத்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் பல பிரச்சினைகளுக்கு பின்னர் கேப்டன் ரோகித் சர்மா முடிவை எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.

ஐதராபாத்தில் உள்ள ராஜாஜி சர்வதேச மைதானத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அணி தேர்வு

அணி தேர்வு

இந்த போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் தான் குழப்பம் நீடித்து வந்தது. அதாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் திருமணத்திற்காக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரின் இடத்தை நிரப்புவதற்கு இஷான் கிஷான் மட்டுமே உள்ளார். ஆனால் அவரை மிடில் ஆர்டரில் ஆட வைப்பதா? சுப்மன் கில்லை மிடில் ஆர்டருக்கு கொண்டு செல்வதா என்ற குழப்பம் இருந்தது. இறுதியில் சுப்மன் கில் இடத்தை மாற்ற வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திடீர் விலகல்

திடீர் விலகல்

மிடில் ஆர்டரில் தான் கடைசி நேரத்தில் பிரச்சினை எழுந்தது. 4வது வீரராக களமிறங்கி வந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் திடீரென முதுகுவலி காரணமாக தொடரில் இருந்து விலகிவிட்டார். இவருக்கு மாற்றாக ராஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டார். எனினும் அதிரடி நாயகன் சூர்யகுமாரை அந்த இடத்தில் களமிறக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பேட்டிங் வரிசையில் மற்றபடி விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சரியான இடங்களில் உள்ளனர்.

சுழற்பந்துவீச்சு துறை

சுழற்பந்துவீச்சு துறை

சுழற்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் அக்‌ஷர் பட்டேல் அணியில் இல்லை. எனவே நியூசிலாந்தை எதிர்க்க வேண்டும் என்றால் லோயர் ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் தேவை. எனவே வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டு வருகின்றனர். இவருடன் சேர்ந்து குல்தீப் யாதவ் சுழலில் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மீண்டும் அதே கூட்டணி

மீண்டும் அதே கூட்டணி

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் இலங்கை தொடரில் கலக்கிய முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக சீனியர் வீரர் முகமது ஷமி பந்து வீசவுள்ளார். கடந்த போட்டியிலேயே ஷமி பெரிய அளவில் கவனம் பெறாத சூழலில் இந்த முறை தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக்

Story first published: Tuesday, January 17, 2023, 18:57 [IST]
Other articles published on Jan 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+