Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்தின் கம்பேக்.. 2வது ODI-க்கான ப்ளேயிங் 11ல் 2 முக்கிய மாற்றங்கள்.. வெளியேறுவது யார் யார்?

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் 2 முக்கிய மாற்றங்களுடன் களமிறங்க இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார். மேலும் இந்திய பவுலிங் திட்டம் முழுவதுமாக மாறவுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி கைப்பற்றிய சூழலில் 2வது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடரை கைப்பற்றிவிட வேண்டும் என இந்திய அணி வீரர்களும், தோல்விக்கான பதிலடியை கொடுக்க ஆஸ்திரேலிய அணியினரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

2வது ஒருநாள் போட்டி

2வது ஒருநாள் போட்டி

முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியின் பாதைக்கு சென்றுவிட்டு பின்னர் ஜடேஜா - கே.எல்.ராகுல் ஆகியோரின் போராட்டத்தால் வெற்றி கண்டது. குறிப்பாக 83 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து விட்டது. எனவே இந்த முறை பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு வருவதால், ஒரு வீரரை வெளியேற்ற வேண்டிய சூழல் உள்ளது.

வெளியேறுவது யார்?

வெளியேறுவது யார்?

ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்து சதத்தை விளாசி தனது இடத்தை பிடித்துக்கொண்டார். இதனால் இஷான் கிஷான் தான் ரோகித்திற்கு வழிவிடுவார் எனத்தெரிகிறது. என்னதான் சூர்யகுமார் யாதவ் சொதப்பியிருந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நேரத்தில் மிடில் ஆர்டரில் கண்டிப்பாக தேவை.

பவுலிங் மாற்றங்கள்

பவுலிங் மாற்றங்கள்

பவுலிங்கை பொறுத்தவரையில் மும்பை களத்தில் இருந்து விசாகப்பட்டினம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். இங்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படலாம். பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்பதால் சுழற்பந்துவீச்சாளர்கள் தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே ஷர்துல் தாக்கூரை நீக்கிவிட்டு, அக்‌ஷர் பட்டேலை ப்ளேயிங் 11ல் கொண்டு வர அதிக வாய்ப்பு உள்ளது. வாஷிங்டன் சுந்தரும் இந்த களத்திற்கு சரியாக இருப்பார் என்றாலும் தற்போதை ஃபார்மை வைத்து அக்‌ஷருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்

Story first published: Saturday, March 18, 2023, 19:00 [IST]
Other articles published on Mar 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+