சஞ்சு இல்லை.. முன்னணி வீரர் நீக்கம்.. 2வது டி20க்கான இந்திய ப்ளேயிங் 11.. ஹர்திக்கின் முடிவு என்ன?
புனே: இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டிக்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 3 மாற்றங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று புனேவில் உள்ள கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரவு 7 மணிக்கு வழக்கம் போல போட்டி தொடங்கும்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 1- 0 என முன்னிலை வகிக்கும் சூழலில் இன்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நோக்கத்துடன் களமிறங்கவுள்ளது.

ப்ளேயிங் 11 மாற்றம்
இந்த போட்டிக்காக இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீனியர் வீரரான சஞ்சு சாம்சன் தொடரில் இருந்தே விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வெளியேறியுள்ளார். எனவே அவருக்கு மாற்று வீரராக ராகுல் திரிபாதி அணிக்குள் கொண்டு வரப்படலாம். ஜித்தேஷ் சர்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் பெஞ்சில் தான் அமரவைக்கப்படுவார்.

பவுலிங்கில் மாற்றம்
இதே போல பந்துவீச்சிலும் மாற்றம் ஏற்படும். புனே மைதானத்தில் பிட்ச் மும்பையில் இருந்தது போல் இல்லாமல் மெதுவாக இருக்கும். எனவே இங்கு சுழற்பந்துவீச்சு எடுபடுவதை பார்க்கலாம். எனவே ஹர்ஷல் பட்டேலை நீக்கிவிட்டு, வாஷிங்டன் சுந்தரை உள்ளே கொண்டு வரலாம். ஆனால் ஹர்திக் பந்துவீசுவார் என்றால் மட்டுமே இந்த மாற்றம் நடக்கும். ஏனென்றால் முதல் போட்டியில் ஹர்திக் தசைப்பிடிப்பு காரணமாக கடைசி ஓவரை வீசவில்லை.

அர்ஷ்தீப் வருகை
அர்ஷ்தீப் சிங் தற்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஹர்ஷல் பட்டேல் அல்லது உம்ரான் மாலிக் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவருக்கு மாற்றாக அர்ஷ்தீப் சிங் கொண்டு வரப்படலாம். பெரும்பாலும் ஹர்ஷல் பட்டேல் நீக்கப்படுவது உறுதி என தெரிகிறது.

ப்ளேயிங் 11 விவரம்
சுப்மன் கில், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் / அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், யுவேந்திர சாஹல்


Click it and Unblock the Notifications