Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனியும் பொறுத்துக்க முடியாது..” 3வது டி20 போட்டிக்கான ப்ளேயிங் 11.. ரோகித் சர்மா அதிரடி முடிவு!

செயிண்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு இந்திய அணியில் அதிரடி மாற்றத்தை கொண்டு வரவுள்ளார் ரோகித் சர்மா.

Recommended Video

IND vs WI இந்தியா அதிரடியா தான் விளையாடும் - Rohit Sharma

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சூடுபிடித்துள்ளது.

முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று பலமாக இருந்த நிலையில், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரமான கம்பேக் கொடுத்துள்ளது.

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

இந்நிலையில் போட்டியின் முன்னிலையை முடிவு செய்யும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 2வது டி20 நடைபெற்ற வார்னர் பார்க் மைதானத்திலேயே தான் இந்த போட்டியும் நடைபெறுகிறது. இந்த முறை தாமதம் எதுவும் இருக்காது எனக் கூறி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் எடுக்கும் மாற்றம்

ரோகித் எடுக்கும் மாற்றம்

இந்திய அணி கம்பேக் கொடுத்தே தீர வேண்டும் என்பதால், ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஓப்பனிங் ஜோடி இன்னும் இந்தியாவுக்கு செட் ஆகாமல் உள்ளது. எனவே சூர்யகுமார் யாதவை மிடில் ஆர்டருக்கு அனுப்பிவிட்டு இஷான் கிஷானை மீண்டும் அணிக்குள் கொண்டு வரலாம் எனத்தெரிகிறது.

ஓப்பனிங்கில் மாற்றம்

ஓப்பனிங்கில் மாற்றம்

ஒருவேளை இஷான் கிஷான் சேர்க்கப்படவில்லை என்றால் ஓப்பனிங்கில் தீபக் ஹூடா களமிறக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அவர் பேட்டிங் மட்டுமின்றி, ஸ்பின்னராகவும் உதவுகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இதுவரை இருவருக்குமே ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை

புதிய வீரருக்கு வழியிடும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் படு மோசமான ஃபார்மில் இருக்கிறார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திணறி வரும் அவர், நேற்று மீண்டும் பவுன்சர் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். எனவே இன்று முக்கிய போட்டி என்பதால் அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

பவுலிங் படை

பவுலிங் படை

பந்துவீச்சை பொறுத்தவரை அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டதால், எந்தவொரு பெரிய மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. பிட்ச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு உதவுகிறது என்பதால், தீபக் ஹூடாவும் இன்று 3வது ஸ்பின்னராக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, இஷான் கிஷான்/ தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்

Story first published: Tuesday, August 2, 2022, 16:13 [IST]
Other articles published on Aug 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+