For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“யார் சொல்றதையும் கேட்க மாட்டேன்” பாக்.எதிரான ப்ளேயிங் 11ல் ரோகித் காட்டும் பிடிவாதம்.. என்ன காரணம்

மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து ரோகித் சர்மா எந்தவித ஆலோசனையையும் ஏற்காமல் முடிவெடுத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்பேர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

பாகிஸ்தான் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா, வல்லுநர்கள் கூறிய எந்தவித கருத்தையும் ஏற்காமல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் முதன்மை தேர்வாக இருந்து வருகின்றனர்.

பண்ட் நீக்கம்

பண்ட் நீக்கம்

மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக இடதுகை வீரரான ரிஷப் பண்ட் சேர்க்கப்பட வேண்டும் என நிறைய ஆலோசனைகள் தரப்பட்டன. டாப் ஆர்டர் விக்கெட்கள் வெகு சீக்கிரமாக சரிந்தால், ஒரு இடதுகை வீரர் இருந்தால், வலது - இடது ஜோடியாக தலைவலி கொடுக்கலாம். ஆனால் ரோகித் சர்மா இதில் எந்தவித அட்வைஸையும் ஏற்காமல் தினேஷ் கார்த்திக்கை தான் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் சொதப்பியது தான்.

அஸ்வினுக்கு வாய்ப்பு

அஸ்வினுக்கு வாய்ப்பு

சுழற்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் அக்‌ஷர் பட்டேல் கண்டிப்பாக இடம்பெறுவார். மீதமுள்ள ஒரு இடத்திற்கு யுவேந்திர சாஹல் - அஸ்வின் இடையே போட்டி இருந்தது. ஆனால் அஸ்வின் தான் இதில் வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டரில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அஸ்வின் உதவுவார் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதே போல அஸ்வின் ரன்ரேட்டையும் கட்டுப்படுத்துவார்.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் சீனியர் வீரர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் முதன்மை தேர்வாக இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல்-ல் கலக்கிய ஹர்ஷல் பட்டேல் கடந்த சில போட்டிகளாக டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகிறார். மற்றொருபுறம் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக இருப்பதால், அவர் 3வது பவுலராக விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

Story first published: Sunday, October 23, 2022, 11:16 [IST]
Other articles published on Oct 23, 2022
English summary
Rohit sharma didn't take any advice for Team India playing 11 against pakistan match in T20 world cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+