For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இப்போதாவது செஞ்சீங்களே??”.. 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. தவான் அதிரடி மாற்றம்!

ஹேமில்டன்: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

இதனையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப்போகும் 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இது ஹேமில்டன் நகரத்தில் உள்ள மைதானத்தில் காலை 7 மணிக்கு தொடங்கும்.

2வது ஒருநாள் ஆட்டம்

2வது ஒருநாள் ஆட்டம்

இந்நிலையில் 2வது போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய அணி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக தான் இருந்தது. 306 ரன்களை குவித்தது. ஆனால் பந்துவீச்சில் தான் பெரிய தாக்கம் ஏற்படவில்லை. முதல் 3 விக்கெட்கள் விழுந்த போதும், இந்தியாவின் 5 பவுலர்களின் செயல்பாடுகளையும் எதிரணி வீரர்கள் நன்கு அறிந்துக்கொண்டனர்.

கூடுதல் பவுலர்

கூடுதல் பவுலர்

எனவே இந்திய அணியில் கூடுதலாக 6வது பவுலர் ஒருவர் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் மீண்டும் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்குவார்கள். முதல் விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ், பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களமிறங்குவார்கள். ஆனால் 6வது பேட்ஸ்மேன் தேவை என்பதால் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

முதல் போட்டியிலும் ரிஷப் பண்ட் மிக மோசமாக சொதப்பினர். ஆனால் சஞ்சு சாம்சன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார். எனவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தருவார்கள் என தெரிகிறது. ரிஷப் பண்ட் இடத்திற்கு தீபக் சஹார் அல்லது தீபக் ஹூடா கொண்டு வரப்படலாம். தீபக் சஹார் முழு உடற்தகுதியுடன் உள்ளாரா என்பதை சோதித்துவிட்டு, முடிவெடுக்கப்படும். மற்றபடி லோயர் ஆர்டரில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் / தீபக் ஹூடா, யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

Story first published: Saturday, November 26, 2022, 19:27 [IST]
Other articles published on Nov 26, 2022
English summary
Shikhar dhawan makes important changes in Team India playing 11 for the 2nd ODI match against New Zealand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+