For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 பேட்ஸ்மேன் வேணுமா? இல்ல 5 பவுலர்ஸ் வேணுமா? - யப்பா முடியலடா சாமி!

சென்னை: ஒரு டீமை ரெடி பண்றத்துக்குள்ள நாக்கு தள்ளிப் போயிடும் போலயே... இவ்ளோ குழப்பம் இருந்தா என்ன தான் பண்றது?

கண்டிப்பாக சொல்கிறேன். இந்திய நாட்டில் கிரிக்கெட்டும் ஒரு மதம் போலத்தான். ஆனால், கடந்த சில வருடங்களில் ஒரு டெஸ்ட் தொடருக்கு இவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்து பார்த்தது கிடையாது.

ஆம்!. இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரை மொய்க்க ஏகப்பட்ட கண்கள் தயாராக உள்ளன. காரணம், ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வைத்தே நமது அணி வீழ்த்தி வந்திருப்பதே.

 அணித் தேர்வில் இழுபறி

அணித் தேர்வில் இழுபறி

எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அந்தளவுக்கு அணியை தேர்வு செய்வதில் இன்னமும் சிக்கல் நீடிப்பதாகவே தெரிகிறது. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் பொறுத்தவரையில் ரோஹித் - ஷுப்மன் கில் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புஜாரா ஒன் டவுன், கோலி நான்காம் இடம். முதல் நான்கு இடங்களில் குழப்பம் இல்லை. அதற்கு பிறகு மண்டை காய்ச்சலே!

 ஐந்து பவுலரா?

ஐந்து பவுலரா?

5வது இடத்தில் ரஹானே விளையாடுவார். 6வது ஸ்பாட்டில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவேளை 6 பேட்ஸ்மேன் ஃபார்முலா போதும் என்று நினைத்தால், இது தான் பேட்டிங் கூட்டணியாக இருக்க முடியும். ஒருவேளை 4 பவுலர் ஃபார்முலாவுக்கு போனால், இன்னும் ஒரு பேட்ஸ்மேன், அதாவது 7வது பொசிஷனில் ஒரு பேட்ஸ்மேன் சேர்க்கப்படுவார்.

 கோலியின் திட்டம் என்ன?

கோலியின் திட்டம் என்ன?

இந்தியா சமீப காலங்களில் 6 பேட்ஸ்மேன் + 5 பவுலர்ஸ் ஃபார்முலாவில் தான் விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்படி விளையாடித் தான் நிறைய வெற்றிகளையும் பதிவு செய்து வருகிறது. எனினும், சென்னை ஸ்பின் டிராக் என்பதால், 2 வேகம் மற்றும் 3 ஸ்பின் கொண்டு களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.

 அடிஷ்னல் ஸ்பின்னர் யார்?

அடிஷ்னல் ஸ்பின்னர் யார்?

அனைவரது கணிப்பின் படி, 5 பவுலர்கள் ஃபார்முலாவில் இந்தியா சென்றால், அஷ்வின் மற்றும் குல்தீப் இணைக்கு துணையாக இணையப் போகும் மூன்றாவது ஸ்பின்னர் யார் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு சிலர் அக்ஷர் படேலை கைக்காட்ட, ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் கொடுக்கலாம் என்று வாஷிங்டன் சுந்தருக்கும் சப்போர்ட் குவிகிறது.

 பும்ராவுக்கு சப்போர்ட் யார்?

பும்ராவுக்கு சப்போர்ட் யார்?

அதேபோல், வேகக் கூட்டணியில் பும்ரா தலைமையில் இங்கிலாந்தை தாக்க ரெடி. ஆனால், இரண்டாவது பவுலராக அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மாவை சேர்ப்பதா அல்லது ஆஸ்திரேலியாவில் கலக்கிய முகமது சிராஜை சேர்ப்பதா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

Story first published: Wednesday, February 3, 2021, 17:03 [IST]
Other articles published on Feb 3, 2021
English summary
team india playing xi for 1st test vs england - wow squad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+